/* */

நடிகர் கமலஹாசன் தலைமையில் கேரள மக்களை சந்திக்க சிறப்புக்குழு

நடிகர் கமலஹாசன் தலைமையில் ஒரு சிறப்புக்குழு அமைத்து கேரள மக்களை சந்தித்து பெரியாறு அணை பற்றிய அச்சத்தை தீர்க்க வேண்டும்

HIGHLIGHTS

நடிகர் கமலஹாசன் தலைமையில்  கேரள மக்களை சந்திக்க சிறப்புக்குழு
X

முல்லைப்பெரியாறு அணை பைல் படம்.

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது : நேற்று முன்தினமும், நேற்றும் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை கண்காணிப்பது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மேற்பார்வை குழுவின் கூட்டம், டெல்லியில் நடந்தது. ஏற்கெனவே இருக்கும் இரண்டு மாநில பிரதிநிதிகளோடு, புதிதாக நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு வல்லுநர்களும் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், கண்காணிப்புக் குழுவின் தலைவரான குல்சன் ராஜ், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது தொடர்பாக இரண்டு மாநில தலைமைச் செயலாளர்களும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

ஆனால் இது எந்த அளவு சாத்தியம் என்று எங்களுக்கு (தமிழக விவசாயிகளுக்கு) தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகளையே உதாசீனப்படுத்திய கேரள மாநில அரசு, ஒரு மேற்பார்வை குழுவின் பரிந்துரையையா ஏற்றுக் கொள்ளப் போகிறது? என்கிற கேள்வி எழுகிறது. எங்களை (தமிழக விவசாயிகளை) பொருத்தவரை உத்தரவு எங்கிருந்து வந்தாலும், பெரியாறு அணை விஷயத்தில் கேரளா தான் எடுத்து இருக்கக்கூடிய நிலைப்பாட்டில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை.

இன்றைய நிலையில் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் சம்மதித்தால், அடுத்த நொடியே அவரது அரசு கவிழ்ந்து விடும்... அவருக்கு பதிலாக ஷைலஜா டீச்சர் கேரள மாநில முதல்வராக கட்சியின் பொலிட்பீரோ வால் நியமிக்கப்படுவார். இதுதான் அங்குள்ள நிலைமை. கேரளாவில் உள்ள இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பத்தினம்திட்டா உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வாழும் மலையாள அப்பாவிகள், முல்லைப் பெரியாறு அணை எந்நேரமும் உடையலாம் என்கிற அச்சத்தை உள்வாங்கியவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது

இன்றைக்கும் கேரளா முழுவதும் பெரியாறு அணைக்கு எதிரான விஷமப் பிரசாரங்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. மலையாள திரைப்பட உலகின் பிரபல நடிகர்களான உண்ணி முகுந்தன் மற்றும் பிருத்விராஜ் போன்றோர் கூட பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்பதை சமூக வலைதளங்கள் மூலமாக மலையாள மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்துக் கொண்டு உள்ளனர். இதற்கெல்லாம் மேலாக டாக்டர் ஜோ ஜோசப், வழக்கறிஞர் ரசல் ஜோய் போன்றவர்கள் பெரியாறு அணையை உடைத்துவிட்டு புதிய அணையைக் கட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற தனிநபர்கள் உச்சநீதிமன்றத்தை நாடக்கூடாது என்று ஆரம்பத்திலேயே தடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதுபோன்று தவறான கருத்துக்களை எழுப்பி மக்களை தட்டி அச்சப்படுத்தக் கூடியவர்கள் தான் பெரியாறு அணையின் பிரதான பிரச்சினையே.

எனவே முதலில் மேற்பார்வை குழு பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவில் பரப்பப்படும் நச்சுப் பிரச்சாரங்களை நிறுத்துவதற்கு, கேரள மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். என்னதான் மேற்பார்வை குழு தன்னுடைய அதிகாரத்தை இரண்டு தலைமைச் செயலர்களும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டாலும்,152 அடி தண்ணீரை பெரியாறு அணையில் தேக்குவது என்பது இன்றைய நிலையில் மலையாள மக்களின் கைகளில்தான் இருக்கிறது. 6 மாவட்ட மலையாள மக்களின் கடும் எதிர்ப்பை மீறி எப்படி நம்மால் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரை தேக்க முடியும். நச்சுப்பாம்புகளை நசுக்குவதற்கு கேரளா ஆரம்பத்திலேயே தவறிவிட்டது. அதனுடைய விலை இன்றைக்கு சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பலமாகவே எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

வறட்சியின் கோரப் பிடியில் சிக்கிக் கிடக்கும் இந்த இரண்டு மாவட்ட மக்களையும் காப்பாற்ற , உச்ச நீதிமன்றமோ ஒரு மேற்பார்வைக் குழுவோ போதாது. அதற்கெல்லாம் மேலாக தேவைப்படுவது இரண்டு மாநில மக்களின் பரஸ்பர ஒற்றுமை. மலையாள நாட்டுக்கு எதிராக விஷத்தை அனுதினமும் கக்கிய , எங்களைப் போன்றவர்களே நிலைமையின் விபரீதத்தை புரிந்து கொண்டிருக்கிறோம். என்னதான் கேரளாவை எதிர்த்து சண்டை போட்டாலும், அங்கு செல்லக்கூடிய எதையும் நம்மால் தடுக்க இயலாது... மனிதாபிமானம் செழித்துக் கிடக்கும் இந்த நாட்டில், மலையாளிகளுக்கு எதையும் அனுப்பக்கூடாது என்று ஒரு கட்டத்துக்கு மேல் நம்மால் சொல்லவும் முடியாது தடுக்கவும் முடியாது. எனவே உச்ச நீதிமன்றமோ மேற்பார்வை குழுவோ அது எதுவாக இருந்தாலும், ஒரு மக்கள் திரளின் போராட்டத்திற்கு எதிராக என்ன செய்துவிட முடியும்.

ஆகவே பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் ஒரு கோரிக்கையை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வைக்க விரும்புகிறது...தமிழகத்தில் உள்ள இடதுசாரி தலைவர்கள், நடுநிலையாளர்கள், பெரியாறு பாசனப் பரப்பில் தொடர்ந்து இயங்கும், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கம்பம் அப்பாஸ், கோம்பை ராமராஜ், கீழ்பவானி பாசன விவசாய சங்கத்தின் தலைவர் நல்லசாமி, அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் நல்லாக் கவுண்டர், உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் இவர்களோடு எங்களது சங்கத்தைச் சார்ந்த சலேத்து மற்றும் பொன் காட்சிக் கண்ணன், நான் (ச.அன்வர்பாலசிங்கம்) ஆகியோரை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைத்து. அந்தக் குழுவிற்கு தலைவராக மக்கள் நீதி மையத்தின் தலைவரும் கேரள மாநில மக்களால் அன்போடு போற்றப்படுபவருமான கமலஹாசனை நியமிக்க வேண்டும். இந்தக் குழு கேரள மாநில முதல்வரை சந்தித்து விட்டு பெரியாறு அணையால் ஆபத்து ஏற்படவிருப்பதாக சொல்லப்படும் 6 மாவட்ட மக்களையும் சந்திக்க வேண்டும். சந்தித்து முல்லைப்பெரியாறு அணையின் பலத்தை பற்றியும், அந்த அணையால் கேரள மக்களுக்கு ஆபத்து இல்லை என்பதை பற்றியும், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட மக்களின் நீர் தேவையை விளக்க வேண்டும். இதுதான் நிலைமையை சீராக்குமே தவிர, உத்தரவுகள் எதுவும் வேலைக்கு ஆகாது. இவ்வாறு கூறியுள்ளனார்.

Updated On: 7 Jun 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’