முதன் முறையாக கேரள அரசை எச்சரித்த கேரள உளவுப்பிரிவு போலீசார்

தமிழர்கள் அமைதி காக்கும் நிலையில் வரம்பு மீறாதீர்கள் என முதன் முறையாக கேரள உளவுத்துறை அம்மாநில அரசை எச்சரித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
முதன் முறையாக கேரள அரசை  எச்சரித்த கேரள உளவுப்பிரிவு போலீசார்
X

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம்.

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில், கேரளாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் கேரளா அத்துமீறினால், தமிழகமும் அத்துமீறும் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் எச்சரித்தார். இவர் வரலாற்று ஆய்வாளரும் கூட. எந்த ஒரு விஷயத்தையும் ஆணித்தரமாக ஆதாரங்களுடன் பேசுபவர். இவரது தலைமையிலான விவசாயிகள் சங்கம் பெரியாறு அணை அமைந்துள்ள பீர்மேடு, தேவிகுளம், உடும்பஞ்சோலை தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என கையெழுத்து இயக்க போராட்டம் அறிவித்தார். ஏற்கனவே பாரதீய கிஷான் விவசாய சங்க தலைவர் டாக்டர் சதீஷ்பாபு மற்றும் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன் ஆகியோர் கேரளாவில் நடந்த பெரியாறு அணை துணை கண்காணிப்பு குழு கூட்டத்திற்கே சென்று, அங்கு அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இதன் மூலம் கேரளாவிற்குள்ளும் நாங்கள் வருவோம் என்பதை காட்டினர். தேக்கடிக்கு தமிழக பஸ்ஸை இயக்க தடை விதித்த கேரள வனத்துறை இ வர்களின் போராட்டத்தால் அடிபணிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பீர்மேடு, தேவிகுளம் தாலுகாக்களை தமிழர்கள் கேட்பது பிரிவினை வாதம், தீவிரவாதம் என கதறிய கேரளா சற்று அடங்கியது. கேரள, தமிழக, மத்திய உளவுத்துறைகள் இந்த கையெழுத்து இயக்கத்தை தடுத்து நிறுத்த பெரும்பாடு பட்டனர். இந்நிலையில், இந்த கோரிக்கையினை தமிழகத்தில் பெரிதாக்கினால், இடுக்கி மாவட்டத்தில் உள்ள தமிழர்களின் சொத்துக்களை கைப்பற்றுவோம் என கேரளா விஷமிகள் அறிவித்தனர். உடனே அன்வர்பாலசிங்கம் தலைமையிலான விவசாய குழுவினர், தமிழகத்தில் உள்ள கேரள நிதி, வர்த்தக, தொழில் நிறுவனங்களின் பட்டியல் எங்கள் கையில் உள்ளது. அத்தனையையும் முடக்கி விடுவோம். ஒரு ரூபாய் கூட எடுத்துச் செல்ல முடியாது என பகிரங்கமாக அறிவித்தனர். முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் கேரள தமிழர்களையும் ஒன்று சேர்ப்போம் என அறிவித்தனர்.

இந்த அறிவிப்பு கேரளாவின் சங்கை பிடித்து நெரித்தது போல ஒரு சிக்கலை உருவாக்கியது. இதனால் நடுங்கிப்போன கேரள உளவுத்துறையின் முயற்சியா அல்லது தமிழக விவசாயிகளின் திட்டத்தில் ஏற்பட்ட மாற்றமா? உறுதியாக தெரியவில்லை. தமிழக விவசாயிகள் பீர்மேடு, உடும்பஞ்சோலை, தேவிகுளம் தாலுகாக்களை தமிழகத்துடன் சேர்க்கும் கோரிக்கையினை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.

இதன் பின்னர் இந்த பிரச்சினையில் வீரியம் குறைந்தது. இதனால் மீண்டும் கேரள விஷமிகள் ஆடத்தொடங்கினர். கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தானே கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பை கேட்டதும், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் கேரளாவிற்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தனர்.

மீண்டும் பிரச்சினை தீயாக எரிந்தது. இதனால் கேரள உளவுத்துறை கேரள மாநில அரசிடம், 'பீர்மேடு, தேவிகுளம், உடும்பஞ்சோலை தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தை தமிழக விவசாயிகள் இப்போது தான் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர். இந்த சூழலில் நீங்கள் அமைதி காக்காமல் அவர்களை வெறுப்பேற்றினால், 'தமிழர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள். காரணம் கேரள சொத்துக்களின் பட்டியல் அவர்கள் கையில் உள்ளது என பகிரங்கமாகவே கேரளாவை எச்சரித்து விட்டனர். எனவே கேரளா அடக்கி வாசிக்காவிட்டால், மீண்டும் பிரச்சினை தீயாய் பற்றி எரிவதை தடுக்க முடியாது' என கேரள அரசை கடுமையாக எச்சரித்தனர். மத்திய உளவுத்துறையும் இதே எச்சரிக்கையினை வழங்க, முடிவில் கேரள அரசு பின்வாங்கியது. தண்ணீர் திறக்க தேக்கடி வரை வந்த, கேரள அமைச்சர் ரோஷி அகஸ்டின், பின் வாங்கி திருவனந்தபுரம் சென்றார். கேரளா இதேபோல் சற்று அடக்கியே வாசித்தால், பிரச்சினையை பேசி தீர்க்கலாம். இல்லை மோதித்தான் ஆக வேண்டும் என்ற நிலை வந்தாலும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என தமிழக விவசாயிகள் அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

தனக்கு தொடர்பு இல்லாத பெரியாறு அணையினை நிர்வகிக்க எப்படி கேரளா அரசு ஒரு பொதுப்பணித்துறை அலுவலகத்தை தேக்கடியில் அமைத்துள்ளதோ, அதேபோல் கேரள உளவுத்துறையில் தமிழர்களை கண்காணிக்க என்றே தனிப்பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 7 Aug 2022 4:16 AM GMT

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  திருச்செந்துார் செந்தில் நாதன் முருக பெருமான் பற்றி அறிவோம்!
 2. கல்வி
  JKKN மருந்தியல் கல்லூரி மாணவன் மாநில அளவிலான மல்யுத்தப்போட்டியில்...
 3. தமிழ்நாடு
  புதிய சிக்கலில் மாட்டினார் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி.
 4. சினிமா
  'பொன்னியின் செல்வன்' படத்தை தாய்லாந்தில் பார்த்த வனிதா விஜயகுமார்..!
 5. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 6. சினிமா
  மும்பை ஓட்டலில் தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை
 7. தென்காசி
  தென்காசி மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
 8. லைஃப்ஸ்டைல்
  மற்றவர் காலில் விழுவது அவமானமா? வெகுமானமா?
 9. சினிமா
  'இந்தி தெரியாது போடா..!' - முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இயக்குநர்...
 10. நாமக்கல்
  2 வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் நரிக்குறவர் காலனி மக்கள்...