/* */

செய்தியாளர்கள் - விவசாய சங்க பிரதிநிதிகள் சமூக வலைதளங்களில் கடும் மோதல்

கூடலுாரில் நிருபர்கள் சிலரும் விவசாய சங்க பிரதிநிதிகளும் தங்கள் தரப்பு நியாயங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

செய்தியாளர்கள் - விவசாய சங்க பிரதிநிதிகள்  சமூக வலைதளங்களில் கடும் மோதல்
X

மாதிரி படம் 

கூடலுாரில் இருந்து மதுரைக்கு குழாய் வழியாக குடிநீர் எடுத்துச் செல்லும் திட்டத்திற்கு கூடலுார் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம், பாரதீய கிஷான் விவசாய சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறது.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு விநாடிக்கு 2400 கனஅடி தண்ணீர் எடுக்க முடியும். இதில் குழாய் வழியாக மதுரைக்கு விநாடிக்கு 60 கனஅடி தண்ணீர் மட்டுமே கொண்டு செல்கின்றனர். சுமார் 130 கி.மீ., துாரம் வரை குழாய் பதித்து குடிநீர் கொண்டு செல்கின்றனர். நிலத்தின் வழியாக இந்த நீரை கொண்டு சென்றால் வழியெங்கும் உள்ள கழிவுகள் கலந்து குடிநீரே குடிக்க தகுதியற்றதாகி விடும். எனவே தான் குழாய் வழியாக அரசு கொண்டு செல்கிறது.

ஆனால் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கமும், பாரதீய கிஷான் விவசாய சங்கமும் இப்படி தண்ணீரை குழாய் வழியாக கொண்டு சென்றால் நிலத்தடி நீர் பாதித்து (வெறும் 60 கனஅடிக்கு?) தேனி, மதுரை மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என இத்திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் கூடலுார் முல்லைப்பெரியாற்றில் வைரவனார் அணையில் இருந்து தினமும் பல கோடி லிட்டர் தண்ணீரை குழாய் வழியாக (கவனிக்கவும்! குழாய் வழியாக) எடுத்துச் சென்று விவசாயம் செய்கின்றனர். இப்படி செய்வது மிகப்பெரிய வி.வி.ஐ.பி., அவர் யார் என்பது விவசாய சங்கம் உட்பட அத்தனை பேருக்கும் தெரியும். இங்கு ஒரு நாள் எடுக்கப்படும் தண்ணீரை வைத்து மதுரைக்கு ஒரு மாதம் குடிநீர் வழங்கலாம். அவ்வளவு தண்ணீரை குழாய் வழியாக அனுமதியின்றி எடுத்துச் செல்கின்றனர். இது பற்றி அத்தனை மீடியாக்களிலும் செய்தி வந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இங்கு தான் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மதுரைக்கு குடிநீருக்கு குழாய் வழியே தண்ணீர் எடுத்தால் மாவட்டம் பாலைவனமாகி விடும் என போராடுகிறீர்களே. இது தவறு என தெரிந்தும் செய்கிறீர்களே? உங்கள் கண்முன்னே நடக்கும் இந்த திருட்டு உங்களுக்கு தெரியாதா? இந்த விஷயத்தில் மட்டும் ஏன் கண்ணை மூடிக் கொண்டுள்ளீர்கள் என தாங்கள் பணிபுரியும் மீடியாக்கள் வழியாகவும், சமூக வலைதளங்கள் வழியாகவும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க நிர்வாகிகளும், பாரதீய கிஷான் விவசாயிகள் சங்க நிர்வாகிகளும், 'நாங்கள் விவசாயம் வளர வேண்டும் என்பதற்காகத்தான் போராடுகிறோம். வைரவனார் அணை முதல் முல்லைப்பெரியாறு, வைகை அணை, வைகை நதி என மதுரை வரை பல ஆயிரம் இடங்களில் இதேபோல் தண்ணீரை அனுமதியின்றி எடுத்து விவசாயம் செய்கின்றனர்.

இவர்கள் தண்ணீரை அனுமதியின்றி எடுத்து விற்றால் நாங்கள் போராடுவோம். அனுமதியின்றி எடுப்பது தவறு என்றாலும் விவசாயம் தான் செய்கின்றனர். இதனால் நிலத்தடி நீர் வளம் பாதுகாக்கப்படுகிறது.

தவிர விவசாய உற்பத்தி பெருகுகிறது. இப்படி அனுமதியின்றி செய்பவர்கள் எல்லோரும் அத்தனை கட்சியிலும் உள்ள வி.ஐ.பி.,க்கள் மற்றும் அதிகாரிகள். இவர்களை எதிர்த்து அரசாங்கத்தாலே எதுவும் செய்ய முடியாது. நாங்கள் என்ன செய்ய முடியும். இப்பிரச்னை (ஆற்றில் அனுமதியின்றி தண்ணீர் எடுக்கும் பிரச்னை) தமிழகம் முழுவதும் உள்ளது. இதற்கு முதல்வர் தான் தீர்வு காண வேண்டும் என பதிலளித்து வருகின்றனர்.

இருதரப்பினரும் தங்கள் தரப்பு நியாயங்களை சமூக வலைதளங்களி்ல் பதிவிடுவதை அத்தனை தரப்பினரும் மௌனமாக கவனித்து வருகின்றனர். இப்பிரச்னை தற்போதய நிலையில் தேனி மாவட்டத்தில் அனைத்து தரப்பினர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Updated On: 28 April 2022 1:06 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  6. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  8. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  9. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  10. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!