/* */

மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்., கடைசியாகபார்த்த சினிமா எது தெரியுமா?....

former chief minister mgr saw last cinema தமிழக மக்களுக்கு எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் இன்று வரை மறக்க முடியாதது. எம்.ஜி.ஆருடன் தனக்கு இருந்த பழக்கம், நினைவலைகள் தொடர்பாக இயக்குனர் பாரதிராஜா பகிர்ந்துள்ளார்.

HIGHLIGHTS

மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்., கடைசியாகபார்த்த சினிமா எது தெரியுமா?....
X

மறைந்த தமிழகமுன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜானகி அம்மாளுடன் இயக்குனர் பாரதிராஜா (கோப்பு படம்)

former chief minister mgr saw last cinema

நான் சினிமாவில் இயக்குநராவதற்கு முன் ஒரு தயாரிப்பாளர் அலுவலகத்தில் இருந்தேன். ஒருநாள் திபுதிபுவென பலர் அந்த தயாரிப்பு அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது, 'சின்னவர் வருகிறார்... சின்னவர் வருகிறார்...' என்று பயங்கர பரபரப்பு. அப்போது அலுவலக வளாகத்தில் படகுபோல ப்ளைமவுத் கார் வந்து நின்றது. காரிலிருந்து ஆயிரம் சூரியன் ஜொலிப்போடு குல்லா, கறுப்புக் கண்ணாடியுடன் மல்லிகைச் சிரிப்போடு எல்லோரையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடி எம்ஜி.ஆர் வந்திறங்கினார்.

former chief minister mgr saw last cinema


former chief minister mgr saw last cinema

‘இவருக்கு யார் சந்திரன் என்று பேர் வைத்தது, சூரியன் என்றல்லவா பெயர் வைத்திருக்கவேண்டும்’ என்று நினைத்தபடி ஆச்சர்யம் அகலாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன். அருகில் வந்ததும் என் கைகள் தன்னிச்சையாக அவரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டது.

ரோஜா மலரின் வாசத்தோடு ராஜா மாதிரி எங்கள் அலுவலகத்துக்குள் வந்தார். பிற்காலத்தில் நான் அந்த ராஜகுமாரனின் பாசத்துக்கு ஆளாவேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை. அன்று அவரது அன்பில் வீழ்ந்த என்னையும் அவரையும் பின் 1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி வரையிலும் எந்தக் கொம்பனாலும் பிரிக்க இயலவில்லை.

தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் இருந்த ப்ரிவ்யூ தியேட்டரில் என் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தை எம்.ஜி.ஆருக்குத் திரையிட்டுக் காட்டினேன். அப்போது எம்.ஜி.ஆர் முதல்வர். எனது படத்தை முழுமையாகப் பார்த்து விட்டு என்ன விமர்சனம் சொல்லப்போகிறாரோ என்கிற பதைபதைப்போடு தியேட்டர் வாசலில் காத்திருந்தேன். படம் பார்த்து விட்டு வெளியில் வந்தவர், நேராக என் அருகில் வந்து என் கைகளைப் பற்றிக்கொண்டார்.

"அஞ்சு பத்து 'அண்ணா'க்கள் செய்ய வேண்டிய பகுத்தறிவுப் பிரசாரத்தை ஒரே படத்தில் சாதித்துக் காட்டிட்ட. என் படத்துல நான் சொல்லத் தயங்குற பல விஷயங்களை தைரியமாப் படமாக்கியிருக்க. பாராட்டுக்கள்" என்று சொல்லியபடி என்னை கட்டியணைத்துக் கொண்டார்.

former chief minister mgr saw last cinema


former chief minister mgr saw last cinema

ஒருமுறை எம்.ஜி.ஆர் தலைமையில் சென்னை விஜயசேஷ மஹாலில் நடந்த கல்யாணத்துக்கு என்னையும் அழைத்து இருந்தனர். எம்.ஜி.ஆர் என்னைப் பார்த்துவிட்டு உதவியாளர் மூலம் மேடைக்கு அழைத்தார். திடீரெனப் பேசவும் சொல்லி விட்டார். 'எங்கள் கிராமத்தில் இருக்கும் சினிமா கொட்டகையில் 'நாடோடி மன்னன்' திரைப்படத்தைப் பலமுறை பார்த்துப் பிரமித்தவன் நான். ஒருமுறை எம்.ஜி.ஆர் எங்கள் கிராமத்துக்கு வந்தார். எப்படியாவது அவரது சில்க் ஜிப்பாவைத் தொட்டு விடவேண்டும் என்பது எங்களுக்குள் போட்டி, கடைசியாக நான் தொட்டுவிட்டேன்' என்று நான் பேசியபோது பச்சைக்குழந்தை மாதிரி எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டே இருந்தார்.

அதன்பிறகு அவருடைய கண்கள் கடைசியாகப் பார்த்த படம் 'வேதம் புதிது'. 'வேதம் புதிது' திரைப்படம் வெளிவந்துவிடக்கூடாது என்று சிலர் கச்சை கட்டிக்கொண்டு வேலை பார்த்தனர், என்னென்ன உள்ளடி வேலைகள் செய்ய வேண்டுமோ, அனைத்தையும் செய்தனர்.

அப்போது ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமனிடம் போனில் பேசி, எனக்காக உரிமையுடன் சண்டை போட்டு அந்தப் படத்துக்கு சென்சார் சர்டிஃபிகேட் வாங்கிக் கொடுத்தவர், எம்.ஜி.ஆர்.

அடுத்து 'வேதம் புதிது' படத்தை அவருக்குத் திரையிட்டு காட்டியபோது தனது பக்கத்து இருக்கையில் என்னை அமரச்சொன்னார். ஒவ்வொரு காட்சியைப் பார்க்கும்போதும், என் கைகளை இறுகப்பற்றித் தன் உணர்வுகளை வெளிப்படுத்தினார்.

'வேதம் புதிது' ரிலீஸாகும்போது எம்.ஜி.ஆர் உயிரோடு இல்லை. அந்தப்படம் திரையிட்டபோது டைட்டிலில் ' புரட்சித் தலைவர் கண்கள் கடைசியாகப் பார்த்த திரைப்படம்' என்று எழுதியிருந்தேன்."

-பாரதிராஜா என்கிற அல்லிநகரம்

சின்னசாமி (சினிமா விகடனுக்கு அளித்திருந்த பேட்டி).

Updated On: 8 July 2023 5:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  2. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  3. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
  4. வீடியோ
    அரசியலை தொழிலாக செய்யும் அரசியல்வாதிகள் !போதை பொருள் தொழிலா? #public...
  5. வீடியோ
    திராவிட மாடலை காரி துப்பும் சாமானியர் ! #dmk #mkstalin #public...
  6. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  7. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  8. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  9. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  10. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...