Begin typing your search above and press return to search.
கம்பம் அருகே வீட்டு மாடியில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலி
கம்பம் அருகே ராயப்பன்பட்டியில் வீட்டு மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானான்.
HIGHLIGHTS

கம்பம் அருகே புதுப்பட்டியை சேர்ந்த மெக்கானிக் அருண்குமார் மகன் கமலக்கண்ணன்(9). தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்த இவர், வீட்டில் மாடியில் இன்று காலை விளையாடிக் கொண்டிருந்தார். தந்தை வேலைக்கு சென்று விட்டார். தாய் வெளியே சென்றிருந்தார். அப்போது மாடி வீட்டில் இருந்த மின் இணைப்பில் தெரியாமல் தொட்டு விட்டார்.
கமலக்கண்ணன் உடலில் மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் கமலக்கண்ணனை கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கமலக்கண்ணன் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அருண்குமார் கொடுத்த புகாரில் உத்தமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.