/* */

திராவிட கட்சிகளை அசரவைத்து..... அரசியல் களத்தையே அதிரவைக்கும் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை.....படிங்க...

bjp state president, april 14 announcement கபடி கபடினு போய் கோட்டை தொட்டு விட்டு வருபவன் அல்ல நான். உள்ளே போய் எதிரியை தூக்கி வீசிவிட்டு வருவது தான் எனது ஸ்டைல்.

HIGHLIGHTS

திராவிட கட்சிகளை அசரவைத்து.....  அரசியல் களத்தையே அதிரவைக்கும்   பாஜ மாநில தலைவர் அண்ணாமலை.....படிங்க...
X

நேர்மை, அசராத உழைப்பு, விமர்சனங்களுக்கு பதிலடி என அதிரடிப்பவர்தான் அண்ணாமலை.

bjp state president, april 14 announcement

நிச்சயம் அதை செய்து முடிப்பேன்..!! இதுதான் பல போராளிகளை கதற வைத்துக் கொண்டு இருக்கும் அண்ணாமலை தனது அரசியல் பிரவேசம் குறித்தும் நோக்கம் குறித்தும் உதிர்த்த வார்த்தைகள். கொங்கு தேசத்தில் சின்ன தாராபுரத்தில் சிறு கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து கோவையில் படித்து பின்னர் லக்னோ ஐஐஎம் மில் படித்து விட்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி முதல் முயற்சியிலேயே ஐபிஎஸ் பட்டம் பெற்றவர்.

bjp state president, april 14 announcement


bjp state president, april 14 announcement

பயிற்சி காலத்தில் இவர் தான் இவரது பேட்ஜில் டாப்பர். அதனாலேயே குடியரசு தலைவர் முன்னிலையில் உரையாற்றும் அரிய வாய்ப்பை பெற்றவர். பிறகு கர்நாடக மாநிலத்தில் பணி நியமனம். மத மோதல்கள் அதிகம் நடக்கும் உடுப்பி சிக்மகளூர் பகுதியில் அதிக நாட்கள் எஸ்பி ஆக பணிபுரிந்தார்.

இதை பற்றி சமீபத்தில் நடந்த கலந்துரையாடலில் கூறிய அண்ணாமலை ஏன் சார் என்னை மட்டும் இந்த மாவட்டத்தில் தொடர்ந்து பணியில் அமர்த்துகிறீர்கள் பாருங்கள் மற்ற எஸ்பி எல்லாம் நிம்மதியாக இருக்கிறார்கள், என்னால் நிம்மதியாக உறங்க கூட முடியவில்லை என அப்போதைய முதல்வர் சித்தராமையாவிடம் கேட்டாராம். அதற்கு சித்தராமையா சொன்ன பதில் ‘நீ அங்கு இருந்தால் தான் எனக்கு நிம்மதியாக உறக்கம் வருகிறது. தயவு செய்து பணிமாற்றம் கேட்காதீர்கள்’ என வேண்டுகோள் விடுத்தாராம்.

bjp state president, april 14 announcement


முதன் முதலாக பாஜ தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்து பாஜவில் இணையும்போது...அருகில் தற்போதைய மத்திய அமைச்சர் முருகன், பொறுப்பாளர் முரளிதரராவ் ஆகியோர். (கோப்பு படம்)

bjp state president, april 14 announcement

அடுத்து அமைந்த மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியில் முதல்வர் குமாரசாமி இவர் பெங்களூர் மாநகர காவல்துறை இணை ஆணையராக வரவேண்டும் என விரும்பி பணி ஆணை வழங்கினார். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் இரு முதல்வர்களிடம் பாராட்டு பெறும் அளவிற்கு நேர்மையாகவும் திறமையாகவும் பணி புரிந்தவர்.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் இவர் ஆர்எஸ்எஸ் தயவால் ஐபிஎஸ் ஆனார் என கும்பல் காமெடி செய்து கொண்டு இருக்கிறது. அவர்களின் அறியாமையை என்னவென்று சொல்ல? இதை கேட்டால் சித்தராமையாவும் குமாரசாமியும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். மக்கள் செல்வாக்கை பற்றி சொல்லவே வேணாம் கர்நாடக சிங்கம் என பாசத்தோடு அழைக்கும் அளவிற்கு சிநேகம்.

bjp state president, april 14 announcement


முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் , தற்போதைய பாஜ மாநில தலைவருமான அண்ணாமலை. (கோப்பு படம்)

bjp state president, april 14 announcement

ஒரு காவல் துறை அதிகாரியை மக்கள் தங்கள் வீட்டு பிள்ளை போல கொண்டாடுவது எல்லாம் சாதரணமாக நடக்காது. தமிழகத்தில் அப்படிப்பட்ட அதிகாரிகள் எனக்கு தெரிந்து இல்லை. அண்ணாமலை நினைத்திருந்தால் பணியில் தொடர்ந்து கமிஷனர் பிறகு டிஜிபி என அசால்டாக உச்சத்தை தொட்டு இருக்கலாம். ஆனால் அதை தூக்கி எறிந்துவிட்டு மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என பொது வாழ்க்கையில் இறங்கி இருப்பது உண்மையிலேயே சூப்பர் ஸ்டார் சொன்ன அதிசயம் அற்புதம்தான்.

அண்ணாமலையை பற்றி கிண்டல் செய்யும் பல நபர்கள் தாங்கள் பார்க்கும் வேலையை எறிந்து விட்டு மக்களுக்காக களத்தில் இறங்கி சேவை செய்ய வேண்டியதுதானே??? யார் தடுத்தார் உங்களை?? பிறகு ஒரு வருடம் கழித்து தேசிய தலைவர் ஜேபி நட்டா ஜி முன்னிலையில் பாஜக வில் இணைகிறார். கோவையில் முதல் கூட்டம். அதன்பிறகு மனிதர் நிற்க கூட நேரமின்றி பம்பரமாக களப்பணி ஆற்றி வருகிறார். கொங்கு பகுதியில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த காரணத்தால் இவருக்கு விவசாயிகளின் பிரச்சினை, தொழில் ரீதியாக உள்ள பிரச்சினை, கல்வி சம்பந்தப்பட்ட விசயங்கள் என பலதும் அத்துப்படி.

bjp state president, april 14 announcement


bjp state president, april 14 announcement

அதற்கு கொங்கு மண்டலத்தில அவருக்கு கூடும் கூட்டங்களே சாட்சி. ஏற்கனவே கொங்கு மண்டலம் தேசிய சிந்தனையும் ஹிந்து உணர்வும் நிறைந்த பூமி. இதில் அண்ணாமலையின் வரவு மிகப்பெரும் பலமாக கட்சி தொண்டர்களால் கருதப்படுகிறது.

சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் நெறியாளர் நீட் எதிர்ப்பு அரசியல்வாதிகள் எல்லாம் முட்டாள்களா என கேட்க அண்ணாமலை அசராமல் உங்க பார்வையில் அரசியல்வாதிகள் முட்டாள்கள் என வைத்து கொள்வோமா என திருப்பி அடிக்க நெறியாளர் முகத்தில் ஈ ஆடவில்லை. ப்ளூ சட்டை போட்டுட்டா என்ன வேணும்னாலும் கேட்டு விடலாமா பிரதர் என போகிற போக்கில் நெறியாளரை பிழிந்து எடு்த்திருக்கிறார். அதன்பிறகே பத்திரிக்கையாளர்கள் உஷாரானார்கள்.

இவரின் ஆளுமை திறனை பார்த்து வியந்த தேசிய தலைவர் பாஜக வின் சாணக்கியர் ராம்மாதவ் ஜி இந்த இளைஞர் ஒரு காலத்தில் நமது கட்சியின் தேசிய முகமாக உருவெடுப்பார். இவர் பல வெற்றிகளை கட்சிக்கு ஈட்டி தருவார் என திருவாய் மலர்ந்து இருக்கிறார். இப்படி எல்லாம் ஒரு மிகப்பெரும் அரசியல் தலைமைகள் எளிதில் பாராட்டி விட மாட்டார்கள். அண்ணாமலையின் நேர்மை, கறைபடியாத ஒழுக்கம், கொள்கை பிடிப்பு, தொலைநோக்குப் பார்வை, எளிமையுடன் மக்களை அணுகும் தன்மை இவை எல்லாம் ஒரு நாள் அவரை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என தேசிய தலைமையும் அரசியல் நோக்கர்களும் கருதுகிறார்கள்.

சரி அண்ணாமலை முதல்வர் ஆவாரா???

அண்ணாமலை மாநில அரசியலையும் தாண்டி கர்நாடகா மற்றும் வட இந்தியா பகுதிகளிலும் தேசிய முகமாக வளர வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. முதலமைச்சர் பதவியையும் தாண்டி மத்திய அமைச்சர் தொடங்கி உள்துறை ராணுவம் என எதிர்காலத்தில் முத்திரை பதிக்கவும் வாய்ப்புண்டு. திறமையான நேர்மையான ஆளுமைகளை சரியானபடி உபயோகிக்கும் பாஜக இவரை விட்டுவிடுமா என்ன?

bjp state president, april 14 announcement


வேட்பாளரை ஆதரித்து மேடைப் பிரச்சாரம் செய்யும் மாநில தலைவர் அண்ணாமலை. (கோப்பு படம்)

bjp state president, april 14 announcement

பலர் இப்போதே ராணுவ அமைச்சர், உள்துறை அமைச்சர் என ஏதேதோ சொல்கிறார்களே என விமர்சிக்க கூடும். அவர்களுக்கான பதில் இதுதான் பாஜக வை பொறுத்தவரை ஒரு தலைவர் உள்துறை அமைச்சர் ராணுவ அமைச்சர் ஏன் பிரதமராக கூட வர வாய்ப்புண்டு என கூறும் அளவு கருத்து சுதந்திரம் உள்ள கட்சி. இதே வார்த்தைகளை காங்கிரஸ் கட்சியிலோ திராவிட கட்சியிலோ கூறினால் என்ன நடக்கும் என்பது உலகிற்கே தெரியும்.

இப்போது ஏப்., 14ம் தேதி அதாவது வரும் சித்திரை முதல் தேதி, அரசியல் திருவிழா என அறிவித்துள்ள அண்ணாமலை அன்று ஒரு பெரும் பட்டியல் வெளியிடப்போகிறேன். அரசியல் திருவிழாவை தொடங்கி வைக்கப்போகிறேன். எனது அறிவிப்பு பற்றி, பட்டி தொட்டி எங்கும், தெரு, தெருவாக, கடை, கடையாக, திண்ணை, திண்ணையாக மக்கள் பேசுவார்கள், விவாதிப்பார்கள் எனசொல்லி அதிர வைத்திருப்பது, ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையினையும் அவரை நோக்கி திருப்பி உள்ளது.

Updated On: 28 March 2023 6:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்