தொடங்கியது தீபாவளி விற்பனை: தேனி வியாபாரிகள் சற்று ஆறுதல்

தேனி பஜாரில் இன்று காலை முதல் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க கிராம மக்கள் குவிந்து வருவதால், வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தொடங்கியது தீபாவளி விற்பனை: தேனி வியாபாரிகள் சற்று ஆறுதல்
X

தேனி மதுரை ரோட்டில் இன்று காலை ஒன்பது மணிக்கே பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள். 

தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகள் (680 கிராமங்கள்) உள்ளன. தவிர ஆறு நகராட்சிகள், 22 பேரூராட்சிகள் உள்ளன. சுமார் 13 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் அத்தனை பேரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக தீபாவளி பொருட்கள் வாங்க தேனி வந்து செல்வார்கள். அதற்கான உள்கட்டமைப்பு வசதி தேனியில் உள்ளது.

தேனி மாவட்டத்தை பொறுத்தவரை தேனி மாவட்ட தலைநகர் மட்டுமின்றி, வர்த்தக தலைநகராகவும் விளங்கி வருகிறது. குறிப்பாக தீபாவளி நேரத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் போட்டு பல்வேறு வியாபாரங்களை செய்வார்கள். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தீபாவளி இல்லாமல் போய் விட்டது. இந்த ஆண்டும் நேற்று மாலை வரை தேனி மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியே கிடந்தது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கெல்லாம் மக்கள் வரத்தொடங்கினர். காலை முதல் துாறல் தொடங்கினாலும், மக்கள் வரத்து குறையவில்லை. அனைத்து கடைகளிலும் தீபாவளி வியாபாரம் களை கட்டியது. இனி தீபாவளி வரை இந்த வியாபாரம் குறையாது என தேனி நகர வியாபாரிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Updated On: 31 Oct 2021 12:51 PM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வருது..!
 2. காஞ்சிபுரம்
  விவசாயிகள் வீண் செலவை குறைக்கும் நானோ யூரியா: காஞ்சிபுரம் ஆட்சியர்...
 3. குமாரபாளையம்
  குமாரபாளையம் லட்சுமி நாராயண சுவாமி கோவில் உண்டியல் திறப்பு
 4. காஞ்சிபுரம்
  முதல்வர் நிகழ்வில் முகக்கவசம் அணியாமல் உடன்பிறப்புகள் அலட்சியம்..!...
 5. லைஃப்ஸ்டைல்
  Thiripala Suranam benefits in Tamil திரிபலா சூரணம் பயன்கள் தமிழில்
 6. புதுக்கோட்டை
  தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு: மேலப்பட்டி மாணவர்களுக்கு வாசகர்...
 7. இந்தியா
  நுபுர்சர்மா கருத்து விவகாரம்: ராஜஸ்தானில் வன்முறை வெடித்தது
 8. திருநெல்வேலி
  மக்கள் குறைதீர்க்கும் நாள்: பொது மக்களிடம் மனுக்களை பெற்ற மேயர்
 9. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை புத்தகத் திருவிழா: சிறந்த நூல்களுக்கான விருதுகள்...
 10. விளையாட்டு
  ரசிகர்களுடன் செல்பி எடுக்க இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ தடை