/* */

தேனியில் 20 ஆண்டுகளுக்கு பின் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு

கூடுதல் மழைப்பொழிவு காரணமாக தேனி மாவட்டத்தில் 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

தேனியில் 20 ஆண்டுகளுக்கு பின்  நிலத்தடி நீர் மட்டம்  உயர்வு
X

தேனி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதல் மழைப்பொழிவால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு பின்னர் 40 அடி தேண்டினாலே நிலத்தடி நீர் அதிகளவில் கிடைக்கிறது.

தேனி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக மழைப்பொழிவு மிகவும் குறைந்து வந்தது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பல ஒன்றியங்கள் கருமை ஒன்றியங்களாக அறிவிக்கப்பட்டன. தேனி, சின்னமனுார், பெரியகுளம், ஆண்டிபட்டி ஒன்றியங்களில் சுமார் 500 அடிக்கும் கீழ் நிலத்தடி நீர் மட்டம் சரிந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை, தென்கிழக்கு பருவமழை மிகவும் நல்ல முறையில் பெய்தது. கடந்த ஆண்டு தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் பெய்த மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.

குறிப்பாக இந்த ஆண்டும் பலத்த மழை இல்லாவிட்டாலும், தொடர்ச்சியாக சுமாரான மழை நீண்ட நேரம் பெய்து கொண்டே இருந்தது. இப்படி மழை தொடர்ச்சியாக பெய்ததாலும் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் நிலத்திற்குள் மழை நீர் சென்றது. வெள்ளமாக பெருக்கெடுத்து ஒடி வீணாகவில்லை.

கண்மாய்கள், ஏரிகள், குளங்களில் சிறிது, சிறிதாக தண்ணீர் தேங்கியது. எங்குமே வெள்ளம் பெருக்கெடுத்து செல்லவில்லை. இது போன்ற சாதகமான சூழ்நிலை காரணமாக நிலத்திற்குள் தண்ணீர் இறங்கி நீர் மட்டம் நல்ல முறையில் உயர்ந்துள்ளது. மிகவும் பாதிக்கப்பட்ட கருமை பகுதிகளான சின்னமனுார், ஆண்டிபட்டி, தேனியில் கூட தற்போது 40 அடி ஆழத்திலேயே நிலத்தடி நீர் மட்டம் காணப்படுகிறது.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, கிடைக்கும் மழை நீரை நன்கு சேமித்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 9 Aug 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?