/* */

20 ஆண்டுக்கு பின்னர் வைகையில் 9 மாதங்கள் நீர் வர காரணம் என்ன? (EXCLUSIVE )

மேகமலையில் வளம் கொழிப்பதால், 20 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு வைகை நதியில் 9 மாதங்களை கடந்து தொடர்ச்சியாக நீர் வரத்து இருந்து வருகிறது.

HIGHLIGHTS

20 ஆண்டுக்கு பின்னர் வைகையில் 9 மாதங்கள் நீர் வர காரணம் என்ன? (EXCLUSIVE )
X

வைகை அணை 

தமிழகத்தின் மிகப்பெரிய புலிகள் காப்பகமாக மாறியது மேகமலை (EXCLUSIVE )

தேனி, விருதுநகர் மாவட்ட வனத்துறை பரிந்துரை செய்து 9 ஆண்டுகள் கழித்து மேகமலை புலிகள் காப்பகமாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மேகமலை வனப்பகுதியோடு, ஸ்ரீவில்லிபுத்துார் சாம்பல் நிற அணில்கள் சரணாலயமும் இதில் இணைக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தின் மிகப்பெரிய புலிகள் காப்பகமாக உருவெடுத்துள்ளது.

வைகை அணையில் இருந்து வெளியேறும் நீர்

தமிழகத்தில் முதன் முறையாக முதுமலை தான் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. சத்தியமங்கலம், ஆனைமலை, களக்காடு- முண்டந்துறை வனப்பகுதிகள் அடுத்தடுத்து புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்துார் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் மற்றும் மேகமலை வனப்பகுதிகளை இணைத்து, மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்க வேண்டும் என 2012ம் ஆண்டு கன்சர்வேட்டர் சேகர்குமார் நீரஜ் மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்தார்.

இதற்கு எதிர்ப்புகளும், ஆதரவும் சம அளவில் இருந்ததால், மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்னையை நிதானமாக கையாண்டது. பரிந்துரைக்கப்பட்டு 9 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேகமலை வனப்பகுதியின் பரப்பளவு 626 சதுர கி.மீ., ஸ்ரீவில்லிபுத்துார் சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தின் பரப்பளவு 435 சதுர கி.மீ., இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இதன் ஒட்டுமொத்த பரப்பளவு 1061 சதுர கி.மீ., ஆக உயர்ந்துள்ளது. இதுவே தமிழகத்தின் மிகப்பெரிய புலிகள் காப்பகமாக மாறி உள்ளது.

வைகை அணைப்பகுதி. முன்னே தெரிவது மேக மலை தொடர்ச்சி

உலகப்புகழ்பெற்ற தேக்கடி புலிகள் காப்பகத்தின் பரப்பளவினை விட மேகமலை புலிகள் காப்பகத்தின் பரப்பளவு 150 சதுர கி.மீ., அதிக பரப்பினை கொண்டதாக மாறி உள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

மேகமலை புலிகள் காப்பகமாக மாறி உள்ளதால் வனத்திற்குள் வசிக்கும் மலைவாழ் மக்கள், வனம் சார்ந்து வாழும் கிராம மக்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான நிதியில் 60 சதவீதம் இனி மத்திய அரசு வழங்கும், 40 சதவீதம் மாநில அரசு வழங்கும்.

நலத்திட்ட உதவிகள் அதிகரிக்கப்படும் நேரத்தில் வனப்பாதுகாப்பு பணிகளும் அதிகரிக்கும். காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும் கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்படும். வனக்குற்றங்களை குறைக்கவும், முற்றிலும் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் முழு வீச்சில் எடுக்கப்படும். இந்த பணிகளை மத்திய வனத்துறை நேரடியாக கண்காணிக்கும். அடிக்கடி மத்திய வனத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வுப்பணிகளை மேற்கொள்வார்கள். தவிர மேகமலை வனப்பகுதி முழுமையாக 24 மணி நேரமும் செயற்கைகோள் கண்காணிப்பில் இருக்கும்.

இதுவரை வனத்துறை எடுத்த கடும் நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டு மூல வைகையில் தொடர்ச்சியாக ஏழு மாதங்கள் நீர் வரத்து இருந்தது. கடந்த ஆண்டு மழை நின்ற பின்னரும் இரண்டு மாதம் மூல வைகையில் நீர் வரத்து இருந்தது. இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு அதாவது 20 ஆண்டுகளுக்கு பின்னர் தொடர்ச்சியாக 9 மாதங்களை கடந்து வைகையில் நீர் வரத்து இருந்து வருகிறது. தற்போது கூட வைகை அணை முழு கொள்ளவை எட்டி நிற்கிறது. இந்நிலையில் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, வனம் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பல ஆயிரம் கோடி ரூபாயில் நலத்திட்ட பணிகளும் நடைபெற உள்ளதால், வனம் சார்ந்து வாழும் மக்களை வைத்தே வனத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்படும். எனவே வனவளம் அதிகரித்து 2500 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த பெருமை கொண்ட வைகை நதி இனி வற்றாத ஜீவநதியாக உருவாகும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வைகை ஆறு

வைகை வறண்டதால் ஏற்பட்ட பாதிப்பு

2500 ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கியங்களில் கூட வைகை நதி பற்றி பல பாடல்கள் உள்ளது. அவ்வளவு பெருமை வாய்ந்த வைகை நதி, கடுமையான வனக்குற்றவாளிகளால் பெரும் பாதிப்பிற்கு உள்ளானது. இதனால் கடந்த 18 ஆண்டுகளாக வைகையில் ஓரிரு மாதங்கள் தண்ணீர் வருவதே பெரும் சிரமம் என்ற நிலை உருவானது. மூல வைகை கரையில் உள்ள கடமலைக்குண்டு கிராமத்திற்கு வைகை அணையில் இருந்து குடிநீர் கொடுக்கும் நிலை உருவானது. வைகை நதியின் இரு கரையிலும் அமைந்துள்ள மதுரை மாநகருக்கு காவிரியில் இருந்து குடிநீர் கொண்டு வர வேண்டிய அவல நிலை உருவானது. தவிர மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் தரிசாக மாறின. இதனால் பல லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் வீழ்ந்தது. பல ஆயிரம் கோடி விவசாய வருவாய் வீழ்ந்தது. தற்போது தாமிரபரணி போல் ஓரிரு ஆண்டுகளில் வைகையும் வற்றாத நதியாக மாறும் நிலை உருவாகி உள்ளதால், இழந்த அத்தனையும் மீண்டும் கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது. அழகான நகரான மதுரையின் நடுவே கடந்து செல்லும் வைகை இனி ஆண்டு முழுவதும் வற்றாத நதியாக செல்லும் என்பதை நினைத்தாலே நெஞ்சம் மகிழ்கிறது என வன ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

Updated On: 10 Aug 2021 12:07 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்