/* */

மதுக்கூர் அருகே அட்மா திட்டத்தில் சூரிய கூடாரம் அமைக்க விவசாயிகளுக்கு பயிற்சி

மதுக்கூர் அருகே காசாங்காடு கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் சூரிய கூடாரம் அமைத்தல் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

மதுக்கூர் அருகே அட்மா திட்டத்தில் சூரிய கூடாரம் அமைக்க விவசாயிகளுக்கு பயிற்சி
X

காசாங்காடு கிராமத்தில் நடைபெற்ற அட்மா திட்டத்தின் கீழ் சூரிய கூடாரம் அமைத்தல் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரம் காசாங்காடு கிராமத்தில் முன்னோடி விவசாயியும் ஓய்வுபெற்ற நெய்வேலி தலைமை பொறியாளருமான பாலசுப்பிரமணியன், கொப்பரைகளை இயற்கையான முறையில் சூரிய கூடாரத்தை பயன்படுத்தி உலர்த்தி வருகிறார்.

மதுக்கூர் வட்டாரத்தில் தென்னை விவசாயிகள் அதிகமாக உள்ளதால், பிற விவசாயிகளும் இதனை அறிந்து தங்கள் கிராமங்களில் கூட்டுறவு முறையில் சூரிய உலர்த்தி கூடாரங்களை மானியத்தில் பெற்று பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் மதுக்கூர் வட்டாரம் காசாங்காடு கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். இதில் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் செங்கோல், சூரிய கூடாரங்களை பயன்படுத்தி விவசாய பொருட்களின் தரம் மாறாமல் இயற்கையான சூரிய ஒளியை பயன்படுத்தி உலர்த்துவதன் மூலம் பூஞ்சாண தாக்குதல் இன்றி எளிய முறையில் உலர்த்திட முடியும் என தெரிவித்தார்.

மேலும் விவசாயிகள் இந்த சூரிய கூடாரங்களை பயன்படுத்தி மதிப்புக் கூட்டு பொருட்கள் தயாரித்து தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிடவும் கேட்டுக்கொண்டார். தற்போது வேளாண் பொறியியல் துறை மூலம் 40 சத மானியத்தில் விவசாயிகளுக்கு சூரிய உலர்த்திகள் வழங்கப்பட உள்ளதால் முன்னுரிமை அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ளவும் கேட்டுக்கொண்டார்.

இப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் கார்த்திக் மற்றும் அட்மா திட்ட அலுவலர் சுகிதா ஐயாமணி மற்றும் ராஜு ஆகியோர் செய்திருந்தனர். விவசாயிகள் இப்பயிற்சி தங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தனர்.

காசாங்காடு பாலசுப்ரமணியன் விவசாயிகளுக்கு தனது சொந்த அனுபவங்களை சூரிய உலர்த்தி கூடாரத்தில் நேரடியாக விளக்கிக் கூறி விவசாயிகளின் சந்தேகங்களை தெளிவுபடுத்தினார். வேளாண் அலுவலர் சாந்தி கலந்துகொண்டு விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

Updated On: 21 Feb 2022 8:24 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!