/* */

திருவையாறு அருகே தீ விபத்தில் 7 கூரை வீடுகள் எரிந்து நாசம்

திருவையாறு அருகே தீ விபத்தில் 7 கூரை வீடுகள் எரிந்து நாசம்

HIGHLIGHTS

திருவையாறு அருகே தீ விபத்தில் 7 கூரை வீடுகள் எரிந்து நாசம்
X

தீ விபத்தில் சேதமடைந்த வீடு.

திருவையாறு உள்ள கீழதிருப்பந்துருத்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி சின்னாத்தாள் (வயது40). இவரது கூரை வீட்டில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்தது. இந்த தீ அருகே இருந்த ராஜா, மொட்டையாண்டி, உமா மகேஸ்வரி, சதீஷ்குமார், அசோக், முருகேசன் ஆகியோரின் கூரை வீடுகளுக்கும் பரவியது. இதில் வீடுகளில் இருந்த துணிகள், பாத்திரங்கள், பீரோ, கட்டில் ஆகியவை எரிந்து சேதமடைந்தன. அவற்ற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் என கூறப்படுகிறது.

தகவல் அறிந்த திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மேலும் தீ பரவாமல் போராடி அணைத்தனர். மேலும் திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், ஒன்றியக்குழு தலைவர் அரசாபகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாச்சலம், ஒன்றிய கவுன்சிலர் ஜெயசீலன், ஊராட்சி தலைவர் காயத்ரிரமேஷ், வருவாய் ஆய்வாளர் மஞ்சு, ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினர்.

நடுக்காவேரி போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு, தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர. தீ விபத்து நடந்தபோது, வீட்டில் இருந்தவர்கள் வேலைக்கு சென்று விட்டதாலும், குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட்டதாலும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

Updated On: 11 Feb 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  2. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. உலகம்
    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    வெயிலை விரட்டுங்கள்: இந்தியாவின் கோடைக்கால பழங்கள்!
  9. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  10. தமிழ்நாடு
    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு