/* */

தஞ்சாவூர் அகழியில் படகு சவாரி விடும் திட்டம் ரத்து: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தஞ்சாவூர் கீழ மற்றும் வடக்கு அலங்கம் அகழியை தூர்வாரி படகு சவாரி விடும் திட்டத்திற்கு மாற்றுவதற்கு இந்தியகம்யூனிஸ்ட் எதிர்ப்பு

HIGHLIGHTS

தஞ்சாவூர் அகழியில் படகு சவாரி விடும் திட்டம் ரத்து: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
X

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட குழு கூட்டம் கீழ ராஜவீதி மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட குழு உறுப்பினர் வீ.கல்யாண சுந்தரம் தலைமையில் நடைபெற்றது

தஞ்சாவூர் கீழ மற்றும் வடக்கு அலங்கம் அகழியை தூர்வாரி படகு சவாரி விடும் திட்டத்திற்கு மாறாக வணிக நிறுவனம், மீன் மார்க்கெட் அமைக்க முயற்சி செய்யும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது..

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட குழு கூட்டம் கீழ ராஜவீதி மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட குழு உறுப்பினர் வீ.கல்யாண சுந்தரம் தலைமையில் நடைபெற்றது .

தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வை.சிவபுண்ணியம் அரசியல் அறிக்கை குறித்தும்,மாநில முடிவுகள் பற்றியும் பேசினார்.தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கோ.சக்திவேல், மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர்கள் சி.சந்திரகுமார், சோ.பாஸ்கர், ஆர்.இராமச்சந்திரன், வெ.சேவையா, தி.திருநாவுக்கரசு, ம.விஜயலட்சுமி, அ.கலியபெருமாள், இடைக்குழ செயலாளர்கள் ஒரத்தநாடு வாசு இளையராஜா, பட்டுக்கோட்டை பூபேஷ் குப்தா, பூதலூர் தெற்கு ஆர்.ஆர்.முகில் பிஇ, பூதலூர் வடக்கு ம. பிரபாகரன், மதுக்கூர் முத்துராமன்,தஞ்சை மாநகர செயலாளர் ஆர்.பிரபாகரன் தஞ்சாவூர் ஒன்றியம் பி.குணசேகரன் மற்றும் பேராசிரியர் கோ.பாஸ்கர், தி. கோவிந்தராஜன், தங்க.கிருஷ்ணன், கோசுமின், பன்னீர்செல்வம், இராமசாமி, ஜெனிதா, எஸ் . தாமரைச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தஞ்சாவூர் மாநகரம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி பழைய பேருந்து நிலையம், வணிக வளாகங்கள்,சாலைகள் அகலப்படுத்துதல், பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வந்துள்ளது.

இந்த நிலையில் தஞ்சாவூர் கீழ அலங்கம் மற்றும் வடக்கு அலங்கம் பகுதிகளில் உள்ள அகழியை தூர்வாரி படகுவிடும் திட்டம் அறிவித்து,அந்த பகுதியில் குடியிருந்த ஏழை,எளிய மக்களை எதிர்ப்புகளையும் மீறி வலுக்கட்டாயமாக அப்புறப் படுத்தினர். ஆனால் தூர்வாரி படகு விடும் திட்டத்திற்கான எந்த ஒருபணிகளையும் மாநகராட்சி நிர்வாகம் தொடங்கவில்லை.

அகழியை தூர்வாரி படகுவிடும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாறாக தற்போது வணிக நிறுவனங்களுக்கான கட்டிடம் கட்டுவது மற்றும் மீன் மார்க்கெட் அமைப்பது உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அறிவித்த திட்டத்தை மாற்றி அதற்கான பணிகளை செய்யாமல் மாறாக வேறொரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பணத்தையும், மக்கள் வரிப்பணத்தையும் வீணாக்குவது என்ற மாநகராட்சி பணியினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட குழு வன்மையாக கண்டிக்கிறது.

ஏற்கெனவே கீழ அலங்கம் மற்றும் வடக்குஅலங்கம் அகழியை தூர்வாரி, அழகுப்படுத்தி படகுவிடம் திட்டத்தை செயல்படுத்திட வாய்ப்பு இல்லை என்றால் அந்தப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி அங்கு ஏற்கெனவே வாழ்ந்து வந்த ஏழை, எளிய, உழைக்கும் மக்களை குடியமர்த்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட குழு கூட்டம் தஞ்சை மாநகராட்சியையும், தஞ்சை மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறது .

தஞ்சாவூர் மாநகராட்சியால் மீட்கப்பட்டுள்ள தஞ்சை ஸ்மார்ட் சிட்டி பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள யூனியன் கிளப் இருந்த இடத்தை காவல்துறை பயன்பாட்டிற்கு கேட்பதாக தெரிய வருகிறது, காவல்துறை பயன்பாட்டிற்கு நகரின் பல்வேறு இடங்களில் பெரும் நிலப்பரப்புகள் உள்ள நிலையில், யூனியன் கிளப் இடத்தை காவல்துறைக்கு வழங்குவதை கைவிட வேண்டும்.

அந்த இடத்தில் கல்வியை மேம்படுத்துவது, உயர்கல்வி தேர்வுகள் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான போட்டி தேர்வு எழுதுவதற்கான பயிற்சி- படிப்பு கூடமாக ஏற்படுத்தி தஞ்சை மாநகரம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதியில் உள்ள ஏழை,எளிய,நடுத்தர மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்படுத்தும் விதத்தில் யூனியன் கிளப் இடத்தை படிப்பு- பயிற்சி கூடமாக செயல்படுத்திட தஞ்சை மாநகராட்சி மற்றும் தஞ்சை மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்வதுஎன்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Updated On: 31 Dec 2023 10:30 AM GMT

Related News