/* */

திருமலைச்சமுத்திரத்தில் ஜல்லிகட்டு- 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

தஞ்சை அருகே திருமலை சமுத்திரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 850 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு.

HIGHLIGHTS

திருமலைச்சமுத்திரத்தில் ஜல்லிகட்டு- 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
X

திருமலைசமுத்திரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி. 

தஞ்சாவூர் அருகே உள்ள திருமலை சமுத்திரத்தில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் மற்றும் கோட்டாச்சியர் ரஞ்சித் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டு இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

போட்டியில் பங்கேற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மணப்பாறை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 850 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வெற்றி காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், குவளை, குக்கர் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 16 April 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்