/* */

தஞ்சாவூரில் தேசிய கைத்தறி நாளை முன்னிட்டு கைத்தறி விற்பனை கண்காட்சி தொடக்கம்

National Handloom Day In India- இந்தியாவில் 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது

HIGHLIGHTS

National Handloom Day In India
X

தஞ்சாவூர் மாவட்டஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் 8 ஆவது தேசிய கைத்தறி நாள் விழாவினை முன்னிட்டு நடைபெற்ர  சிறப்பு கைத்தறி விற்பனை கண்காட்சியை பார்வையிட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

National Handloom Day In India- தஞ்சாவூர் மாவட்டஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் 8 ஆவது தேசிய கைத்தறி நாள் விழாவினை முன்னிட்டு சிறப்பு கைத்தறி விற்பனை கண்காட்சியினை மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: இந்தியாவில் 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்.கைத்தறித் தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளர்களின் வருவாயை உயர்த்தவும் அவர்களின் பெருமையை அதிகரிக்கவும் தேசிய கைத்தறி தினம் 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

2022-ஆம் ஆண்டுக்கான 8 -ஆவது தேசிய கைத்தறி நாள் விழாவானது 07.08.2022 அன்று தேசிய அளவில் கொண்டாடப்பட்டது. இதில் கும்பகோணம் சரக கைத்தறிதுறை சார்பில் திருபுவனம் பகுதியில் உள்ளநெசவாளர் பொதுவசதி மைய வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சியும், நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கொரோனா சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம் மற்றும் நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 8-ஆவது தேசிய கைத்தறி நாள் விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக நடைபெற்ற சிறப்பு கைத்தறி கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் திருபுவனம் அசல் வெள்ளி ஜரிகை சேலைகள், ஆப்ஃபைன் பட்டுசேலைகள், வேங்கடகிரி பருத்தி சேலைகள் மற்றும் கோ-ஆப்டேக்ஸ் நிறுவனம் சார்பாக பல்வேறு கைத்தறி இரகங்கள் காட்சிப்படுத்தபட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது எனமாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்ததார்.

இவ்விழாவில் கும்பகோணம் சரககைத்தறிஉதவி இயக்குநர் இரா.கிரிஜாராஜ், கைத்தறிதுறை அலுவலர்கள், சங்க நிர்வாகிகள் மற்றும் சங்க மேலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Aug 2022 11:19 AM GMT

Related News