/* */

100 நாள் திட்ட பணிகளில் ஒன்றிய நிர்வாகம் குறுக்கீடு: ஊராட்சித்தலைவர்கள் புகார்

ஊராட்சி செயலர்களை மாற்றும் போது ஊராட்சி மன்ற தலைவர்களின் ஒப்புதல் மற்றும் தீர்மானம் இல்லாமல் மாற்றக் கூடாது

HIGHLIGHTS

100  நாள் திட்ட பணிகளில் ஒன்றிய நிர்வாகம் குறுக்கீடு: ஊராட்சித்தலைவர்கள் புகார்
X

கும்பகோணத்தில் நடைபெற்ற  ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்.

மகாத்மா தேசிய ஊராக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணிகளை ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மட்டுமே வழங்க அரசு சட்ட விதி இருக்கும் போது, ஒன்றிய தலைவர் குறுக்கிடுவதை மாவட்ட நிர்வாகம் கண்டிக்க வேண்டுமென ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கும்பகோணம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம், பழவந்தான்கட்டளை ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், சோழன்மாளிகை தலைவர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் கார்த்திகாயினி கரிகாலன், ரவி, ஆர்.கே.பாஸ்கர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான மாநில நிதிக்குழு மானியம், மிகவும் குறைவாக இருப்பதால், அதற்கான நிதியை தமிழக முதலமைச்சர் வழங்கவேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்கள் சுதந்திரமாக பணியாற்ற, ஒன்றிய தலைவர்கள் விடுவதில்லை. மாவட்ட நிர்வாகமும், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் உதவி செய்ய வேண்டும். நூறு நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்ட பணிகளை, ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மட்டுமே வழங்க, அரசு சட்ட விதி இருக்கும் போது, ஒன்றிய தலைவர்கள் குறுக்கீடு செய்வதை, மாவட்ட நிர்வாகம் கண்டிக்க வேண்டும். ஊராட்சி செயலர்களை மாற்றும் போது ஊரட்சி மன்ற தலைவர்களின் ஒப்புதல் மற்றும் தீர்மானம் இல்லாமல் மாற்ற கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் சேதுராமன் நன்றி கூறினார்.



Updated On: 30 Aug 2021 10:58 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  3. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  4. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  5. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  8. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  9. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  10. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!