/* */

பாபநாசம் அருகே கோயில் அதிகாரி வீட்டில் நகை, டிவி திருட்டு: போலீஸார் விசாரணை

இவர் பணிக்கு செல்வதற்காக கடந்த 31-ம் தேதி வீட்டு கதவை பூட்டி விட்டு சென்றுவிட்டார்.

HIGHLIGHTS

பாபநாசம் அருகே கோயில் அதிகாரி வீட்டில்  நகை, டிவி திருட்டு: போலீஸார் விசாரணை
X

பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடிச்சென்ற பாபநாசம் கோயில் அதிகாரியின் வீடு 

பாபநாசம் அருகே கோயில் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், டிவி திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, ரெங்கநாதபுரம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் அமலு ( 45) .இவர் நாகப்பட்டினம் மாவட்டம்,கீழ்வேளூர் தாலுகா, திருங்கண்ணங்குடி கிராமத்திலுள்ள தாமோதர நாராயணன் பெருமாள் திருக்கோயின் செயல் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணிக்கு செல்வதற்காக கடந்த 31-ம் தேதி வீட்டு கதவை பூட்டி விட்டு சென்றுவிட்டார். பின்னர், மீண்டும் 4-ம் தேதி இரவு வந்து பார்க்கும்போது, வீட்டில் இரும்பு கிரில் கேட் மற்றும் மர கதவு ஆகியவைகளை உடைத்து, பீரோவில் இருந்த சுமார் 6 கிராம் நகைகள், எல்.இ.டி டிவி உள்பட ரூ 30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக, கோயில் செயல் அதிகாரி அமலு, அளித்த புகாரின் பேரில், பாபநாசம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் நேரில் வந்து, வீட்டை பார்வையிட்டபின், வழக்கு பதிவு செய்தனர். நகைகள் மற்றும் டிவியை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், திருட்டு நடந்த வீட்டில், கைரேகை நிபுணர் சங்கவி, கைவிரல் ரேகையை பதிவு செய்தார். தஞ்சையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Updated On: 5 Sep 2021 2:20 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  2. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  3. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  4. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  5. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  9. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?