/* */

தென்காசி அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினம் கருத்தரங்கு

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் நோய் பற்றிய கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசி அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினம் கருத்தரங்கு
X

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் நோய் பற்றிய கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், இந்திய மருத்துவ சங்கம் மருத்துவர்கள், குறிப்பாக தென்ன்காசி மாவட்ட மூத்த பொது நல மருத்துவர்கள் என சுமார் 150 மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளரும், அரசு டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் மரு.ஜெஸ்லின் அனைவரையும் வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்டச் செயலாளர் மரு.செந்தில் சேகர், மாவட்ட பொருளாளர் மரு.ராஜேஷ் கண்ணா, அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட செயலாளர் (டிபிஹெச் விங்) மரு.முகமது இப்ராஹிம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் கலந்து சிறப்பித்த தென்காசி மாவட்ட மூத்த மருத்துவர்கள் மரு.சுகந்த குமாரி, மரு.முத்தையா, மரு.ராமகிருஷ்ணன், மீரான் மருத்துவமனை மரு.அஜீஸ் முகைதீன் அகமது ஆகியோரை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.

நிகழ்ச்சியில் மேலும் சிறப்பு விருந்தினர்களாக இணை இயக்குனர் நலப்பணிகள் மரு. வெங்கட்டரங்கன், துணை இயக்குனர் காசநோய் மரு.வெள்ளைச்சாமி, ஆய்க்குடி மரு.செந்தில் குமார், தென்காசி மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் மரு.விஜயகுமார், மரு.மணிமாலா, தென்காசி குழந்தைகள் நல மரு. முஸ்ஸாமில், மரு.ராஜலட்சுமி கலந்து சிறப்புரையாற்றினர்

கருத்தரங்கில் உறைவிட மரு.அகத்தியன், மரு.மல்லிகா, மரு.மாரிமுத்து, புளியங்குடி அரசு மரு.ராஜ்குமார் , மரு.புனிதவதி, மரு.அனிதா பாலின், மரு.தமிழருவி, மரு.அன்ன பேபி, மரு.கிருத்திகா ஷைலினி, மரு.கார்த்திக், மரு.முத்துக்குமாரசாமி, மரு.மணிமாலா, மரு.மது, மரு.ராம்குமார், மரு.செல்வ பாலா, மரு.கீர்த்தி, மரு.தேவி உத்தமி, மரு.தயாளன், மரு.சுரேஷ் மில்லர், மற்றும் பல மருத்துவர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் மருத்துவமனை கண்காணிப்பாளரும் அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவரும், மாநில செயலாளருமான (டிஎம்எஸ் விங்) மரு.ஜெஸ்லின் அனைத்து பேச்சாளர்களையும் கலந்து கொண்ட அரசு டாக்டர்கள் சங்க உறுப்பினர்களையும் வாழ்த்திப் பேசினார்.

நிகழ்ச்சியில் அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட செயலாளர் (டிபிஹெச்) மரு.முஹம்மது இப்ராஹிம் கருத்தரங்கை ஏற்பாடு செய்த தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்களுக்கும், கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய அனைத்து மருத்துவர்களுக்கும், கலந்து கொண்ட அனைத்து மருத்துவர்களுக்கும் நன்றி கூறினார். கருத்தரங்க நிகழ்ச்சிகளை மரு.கோபிகா, மரு.ஜெரின் இருவரும் இணைந்து தொகுத்து வழங்கினர். தோல் நோய் மருத்துவ நிபுணர் மரு.கோபிகா நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்த மருத்துவமனை நிர்வாகத்திற்கும் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்திய மரு.லதா, மரு.மல்லிகா, மரு.கார்த்திக் ஆகியோருக்கும் பேச்சாளர்கள் அனைவருக்கும், கலந்து கொண்ட மருத்துவர்கள் அனைவருக்கும், சுமித் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றிகளை கூறிக் கொண்டார்.

Updated On: 18 Dec 2021 1:34 AM GMT

Related News