/* */

முறைகேடாக உர விற்பனை செய்தால் உரிமம் ரத்து: ஆட்சியர் எச்சரிக்கை

தென்காசி மாவட்டத்தில் முறைகேடாக உர விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

முறைகேடாக உர விற்பனை செய்தால் உரிமம் ரத்து: ஆட்சியர் எச்சரிக்கை
X

தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர ராஜ்.

தென்காசி மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் யூரியா 1917 மெ.டன், டிஏபி 468 மெ.டன், பொட்டாஷ் 434 மெ.டன், காம்ப்ளக்ஸ் 2223 மெ.டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 201 மெ.டன் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

உரங்களை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். விவசாயியிடம் ஆதார் எண் பெற்று விற்பனை முனைய கருவியில் கைரேகை பதிவு செய்து சாகுபடி செய்யப்படும் பயிருக்கு தேவைப்படும் உரங்கள் மட்டுமே வழங்க வேண்டும்.

விற்பனை செய்யப்பட்ட உரங்களுக்கு உரிய ரசீது வழங்கி விவசாயியின் கையொப்பம் பெற வேண்டும். பதிவேடுகள் முறையாக பராமரிக்க வேண்டும். மானிய உரங்கள் விற்பனை செய்யும் போது விவசாயிகளின் விருப்பத்துக்கு மாறாக இதர இடுபொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது. உரங்களின் விலை, இருப்பு விபரங்கள் தகவல் பலகையில் விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் தினமும் குறிப்பிட வேண்டும்.

அனைத்து உர விற்பனையாளாக் ளும் உரகக் ட்டுப்பாட்டுச் சட்டம் 1985க்கு உட்பட்டு உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விதிமீறல் எதுவும் கண்டறியப்பட்டால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உரிமம் ரத்து செய்யப்படும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர ராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On: 27 April 2022 6:14 AM GMT

Related News