/* */

கீழப்புலியூர் தம்புராட்டி அம்மன் கோவில் தேரோட்ட நிகழ்ச்சி

கீழப்புலியூர் தம்புராட்டி அம்மன் கோவில் சித்திரை பெரும் திருவிழா தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

கீழப்புலியூர் தம்புராட்டி அம்மன் கோவில் தேரோட்ட நிகழ்ச்சி
X

கீழப்புலியூர் தம்புராட்டி அம்மன் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் தென்காசி மாவட்டம், கீழப்புலியூர் அருள்மிகு தம்பிராட்டி அம்மன் திருக்கோவிலில் வருடாவருடம் சித்திரை பெருந்திருவிழா நிகழ்ச்சி சித்திரை மாதம் இரண்டாம் செவ்வாய் கிழமை (25.05.2023) தொடங்கியது.

முதல் நாள் திருநாள் கட்டளை திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் நடந்தது தொடர்ந்து நடைபெறும் திருநாள் வெவ்வேறு சமூகத்தின் கட்டளையாக 6 நாட்கள் நடைபெற்றது.

தினமும் நண்பகல் 12 மணிக்கு அபிஷேகம், முழுக்காப்பு, மாலை 3 மணிக்கு உருவம், ஆயிரம்கண் பானை நேமிதங்கள், இரவு 10 மணிக்கு கங்கை நீர் எடுத்து வருதல், இரவு 11 மணிக்கு ஆசார படைப்பு, முழுக்காப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. இத்திருத்தேர் நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.


திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. அன்னதானக் குழுவை பொறுப்பேற்று நடத்தும் கீழப்புலியுரைச் சார்ந்த வல்லரசு தம்பிரான் கூறுகையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த மதுரை தொழிலதிபர் ஐயா முத்து பட்டன் இப்போது வலம் வரும் புதுத்திருத்தேரை வடிவமைத்து திருக்கோயிலுக்கு அர்ப்பணித்தார். அன்று முதல் தொடர்ந்து 12 ஆண்டுகளாக திருத்தேர் அன்னதானக்குழுவை ஆரம்பித்து அனைத்து மக்களிடமும் நன்கொடை வசூலித்து சுமார் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.

Updated On: 3 May 2023 5:33 AM GMT

Related News