/* */

தென்காசி மாவட்ட ஊராட்சி குழு சாதாரண கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்

தென்காசி மாவட்ட ஊராட்சி குழு சாதாரண கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட ஊராட்சி குழு சாதாரண கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்
X

தென்காசி மாவட்ட ஊராட்சி குழுவின் சாதாரண கூட்டம் தலைவர் தமிழ் செல்வி தலைமையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஊராட்சி குழுவின் சாதாரண கூட்டம் மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி தலைமையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஊராட்சிக் குழுவின் சாதாரண கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டதிற்கு தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி செயலர் ராம்லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம், முள்ளிக்குளம் ஊராட்சி, முள்ளிகுளம் கிராமம், புளியங்குடி, சங்கரன்கோவில் கழுகுமலை சாலை முதல் முள்ளிக்குளம் சாலை வரை சாலையினை பலப்படுத்துதலுக்காக 12.75 இலட்சம் 2022-2023ம் ஆண்டு மாநில நிதிக்குழு மானியத்தில ஒதுக்கீடு செய்யப்பட்ட பணி, முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாடு 2022-2023 திட்டத்தில் பணி மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அந்த பணியினை ரத்து செய்திடவும், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கடங்கனேரி ஊராட்சி கடங்கனேரி நீலகண்ட சாஸ்தா கோவில் அருகில் தடுப்புச்சுவர் அமைத்தல் மற்றும் கடங்கனேரி ஊராட்சி வெங்கடேஸ்வரமபுரத்தில் சிமெண்ட் கான்கீரிட் சாலை அமைக்கவும், மாவட்ட ஊராட்சி அலுவலக பயன்பாட்டிற்கு தேவையான மூன்று கணினிகள், கணினி பாகங்கள், ஒரு பிரிண்டர், ஒரு ஸ்கேனர் கொள்முதல் செய்திட மன்ற அனுமதிக்காகவும்,

மாவட்ட ஊராட்சி மதிய மற்றும் மாநில நிதிக்குழு மான்யம் அனைத்து உறுப்பினர்களுக்கு சமவிகிதத்தில் பகர்ந்தளித்தல் தொடர்பாக 6வது வார்டு உறுப்பினர் கனிமொழி என்பவரால் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கிற்கான வழக்கறிஞர் கட்டணம் ரூ.9,500 மாநில நிதிக்குழு நிதியிலிருந்து கூடுதல் அரசு வழக்கறிஞருக்கு வழங்கியதை அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அனைத்து மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் கலந்துகொண்டனர்.

Updated On: 24 May 2023 1:35 PM GMT

Related News