/* */

சுரண்டை அருகே காசநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சுரண்டை அருகே இடையர்தவணை ஊராட்சி அலுவலகத்தில் காசநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

சுரண்டை அருகே காசநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

இடையர்தவணை ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற காசநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகில் உள்ள இடையர்தவணை ஊராட்சி அலுவலகத்தில் பாளையங்கோட்டை சாரா தக்கர் கல்லூரியின் தாளாளர் ரெவ‌ சௌந்தரபாண்டியன், முதல்வர் உஷா காட்வின் ஆகியோர் ஆலோசனையின் பேரில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் மாவட்ட காசநோய் மையம் இணைந்து காசநோய் எதிர்ப்பு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவங்கரி தலைமை வகித்தார். கவுன்சிலர் ராமராஜ் முன்னிலை வகித்தார். முனைவர் பட்ட படிப்பு ஆராய்ச்சி மாணவி லிங்கத்துரைச்சி அனைவரையும் வரவேற்றார்.

சாரா தக்கர் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் முனைவர் செல்வ பொன் மலர் இளைஞர் செஞ்சிலுவை இயக்கத்தின் மூலம் நடைபெறும் காச நோய் தடுப்பு திட்ட பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார். திருநெல்வேலி மாவட்ட மருத்துவ கல்லூரியின் தென்காசி மாவட்ட காசநோய் மையம் கீழப்பாவூர் காசநோய் அலகின் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் முருகராஜ் உறுதிமொழி வாசிக்க பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர்.

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் அருள் ஜோதி, பாரதி கண்ணம்மா ஆகியோர் காச நோய் தடுப்பு சிகிச்சை குறித்து விளக்கினர். மாவட்ட சுகாதார கல்வியாளர் மாரிமுத்துசாமி காசநோய் குறித்தும் காசநோயின் அறிகுறிகள், அதை தீர்க்கும் வழிமுறைகள் மற்றும் நோயாளிகளைக் நாம் கையாளும் விதம் குறித்தும் சிறப்புரையாற்றினார்கள்.

சாரா தக்கர் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்க மாணவியர்களின் விழிப்புணர்வு‌ கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பீடித்தொழிலாளர்கள், பல்வேறு தொழில் செய்யும் ஊர் பொதுமக்கள் மற்றும் கீழப்பாவூர் காசநோய் அலகின் சுகாதார பணியாளர்கள் பங்கேற்றனர்.

Updated On: 26 Feb 2022 3:00 AM GMT

Related News