/* */

தென்காசி மாவட்டத்தில் 80 சதவீத பேருந்துகள் இயக்கம்!

தென்காசி மாவட்டத்தில் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் சுமார் 80 சதவீத பேருந்துகள் இயக்கம்-இதுவரை 159 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்த நிலையில், இது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை சார்பிலும், போக்குவரத்து துறை அமைச்சர் சார்பிலும் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த நிலையில், பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டாததால் சில தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, தென்காசி மாவட்ட அளவில் தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பேருந்து பணிமனைகளில் இருந்து மாவட்டம் முழுவதும் 255 பேருந்துகளும், செங்கோட்டையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து பணிமனையில் இருந்து 58 பேருந்துகளும் இயக்கப்பட்டு வந்தன.


இந்த நிலையில், அரசு போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்பட்டு வந்த 255 பேருந்துகளில், இதுவரை 159 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

மேலும் உள்ள பேருந்துகள் அதன் நேரத்திற்கு ஏற்றால் போல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தில் சுமார் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம், கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம், மஸ்தூர் தொழிற்சங்கம் உள்ளிட்ட ஐந்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மற்ற தொழிற்சங்க ஊழியர்களை வைத்து தற்போது அனைத்து பேருந்துகளையும் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 9 Jan 2024 3:27 AM GMT

Related News