ஆழ்வார்குறிச்சி அருகே ரயில் மோதி மிளா பலி

ஆழ்வார்குறிச்சி அருகே ரயிலில் அடிபட்டு மிளா உயிரிழந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆழ்வார்குறிச்சி அருகே ரயில் மோதி மிளா பலி
X

ரயில் மோதி பலியான மிளா (கடமான்).

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில், நெல்லை - தென்காசி ரெயில்வே வழித்தடத்தில், ஆழ்வார்குறிச்சி ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இவ்வழியாக தினமும் காலையில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று வருகிறது. இந்த நிலையில், மிளா (கடமான்) ஒன்று, ஆழ்வார்குறிச்சி அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் மோதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து தகவலறிந்த கடையம் வனத்துறையினர், மிளாவின் உடலை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். வனத்துறையினர் தெரிவிக்கையில், ஆழ்வார்குறிச்சி ரெயில் நிலையம் அருகே, சுமார் 5 வயது மதிக்கத்தக்க ஆண் மிளா ஒன்று எக்ஸ்பிரஸ் ரெயிலில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இதுபற்றி விசாரித்து வருகிறோம் என்றனர்.

Updated On: 2021-09-14T07:24:54+05:30

Related News