/* */

திருப்பத்தூர் அருகே வேட்டங்குடிபட்டி பறவைகள் சரணாலயத்தில் கணக்கெடுக்கும் பணி

திருப்பத்தூர் அருகே வேட்டங்குடிபட்டி பறவைகள் சரணாலயத்தில்  கணக்கெடுக்கும் பணி
X

திருப்பத்தூர் அருகே வேட்டங்குடிபட்டி பறவைகள் சரணாலயத்தில், கணக்கெடுக்கும் பணி. மண்டல வன பாதுகாப்பு அலுவலர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கொள்ளுக்குடிப்பட்டியில் சுமார் 38.4 ஏக்கரில் அமைந்துள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.

வனத்துறை மண்டல பாதுகாப்பு அலுவலரும், மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் கள இயக்குனருமான தீபக் கணக்கெடுக்கும் பணியை துவக்கி வைத்தார். அப்போது நீர் நிலைகளின் பாதுகாப்பு குறித்தும், பறவைகள் வருகை குறித்தும், பறவைகள் தங்குவதற்கான சுற்றுச்சூழல் குறித்தும் கள ஆய்வின் மூலம் கேட்டறிந்தார்.



கணக்கெடுப்பின் மூலம் இங்குள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில், பறவைகளின் எண்ணிக்கை, பறவைகளின் இனங்கள் பற்றி தெரிய வரும். மேலும், கடந்த ஆண்டு இங்கு எந்தெந்த பறவைகள் வந்தது, நடப்பாண்டில் எந்தெந்த பறவைகள் வந்துள்ளது, கடந்த ஆண்டுகளில் வந்த பறவைகள் இந்த ஆண்டும் வந்துள்ளனவா? அல்லது வேறு ஏதும் காரணமாக வரவில்லையா? என்பதை அறிந்து அதனை சரிசெய்ய இக்கணக்கெடுப்பு வழிவகுக்கும் என மண்டல வனப் பாதுகாப்பு அலுவலர் தெரிவித்தார்.

இந்த வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில், மழை காலம் தொடங்கியவுடன் சீதோஷண நிலைக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் பல ஆயிரக்கணக்கான வெளிநாடு மற்றும் வெளி மாநில பறவைகள் வருகை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.


Updated On: 13 Feb 2022 10:50 AM GMT

Related News