சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் மஹாசண்டி யாகம்

ஆயுதப்படை குடியிருப்பில் உள்ள பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் திருக்கோவில் மஹா சண்டி யாகம் நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் மஹாசண்டி யாகம்
X

சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் மஹா சண்டி யாகம் ஹோமம்

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் மஹா சண்டி ஹோமம் வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார், தொடர்ந்து கோவில் முன்பு பிரமாண்ட உற்சவர் மகா மாரியம்மனை நின்ற நிலையில் சர்வ அலங்காரத்தில் அருள்பலித்தார். அம்மன் முன்பு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு பிரதிஷ்டை செய்து யாக குண்டம் அமைத்து கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் தொடங்கியது.

தொடர்ந்து திருமுறை வேத பாராயணம் அம்மன் மூல மந்திரம் தேவி மகாத்மியம் பாராயண ஹோமம் வசுந்தரா ஹோமம் மகா சௌபாக்கிய தேவி ஹோமம் மற்றும் பல்வேறு யாக ஹோமங்கள் நடைபெற்று, யாககுண்டத்தில் 108 மூலிகை பொருட்கள் 12 அத்தியாய ஹோமங்கள் பட்டு சேலைகள் பூமாலைகள் சமர்ப்பிக்கப்பட்டு மகா பூர்ணாகுதி அளிக்கப்பட்டன.

பின்னர் கலசத்திற்கு உதிரிபூக்கள் கொண்டு அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ மகா மாரியம்மனை வழிபட்டனர்.

Updated On: 16 Aug 2021 3:53 AM GMT

Related News