முதல்வராக பழனிச்சாமிக்கு கடைசி பிரச்சாரம்- முத்தரசன்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
முதல்வராக பழனிச்சாமிக்கு கடைசி பிரச்சாரம்- முத்தரசன்
X

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமிக்கு இதுவே கடைசி தேர்தல் பிரச்சாரம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குணசேகரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக சிவகங்கை வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் இன்று பேசியதாவது,முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் செய்வது இதுவே கடைசி.எடப்பாடி பழனிச்சாமி மனசாட்சியோடு பேச வேண்டும். திமுக தலைமையிலான கூட்டணி சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறும்.அதிமுக கூட்டணி வெற்றியின் மீது நம்பிக்கை இல்லாமல் பணத்தை மட்டுமே நம்பி களத்தில் இறங்கியுள்ளனர்.இதனை தேர்தல் ஆணையம் கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொரோனாவை காட்டி தேர்தலை நிறுத்தி விடலாம் என நினைக்கிறார்கள். அதற்கான சாத்தியம் இல்லை. அவ்வாறு செய்தால் இது ஒரு மாபெரும் ஜனநாயக படுகொலை ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 23 March 2021 7:15 AM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  தட்டாங்குட்டை ஊராட்சியில் இன்று 8 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு...
 2. கல்வி
  நவ. 1இல் பள்ளி திறப்பு இல்லை: தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு
 3. நாகப்பட்டினம்
  நாகை கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த 2 இலங்கை மீனவர்கள்...
 4. போடிநாயக்கனூர்
  போடியில் பலத்த மழை: கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளநீரால் மக்கள் அவதி
 5. நன்னிலம்
  நன்னிலம் அருகே அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் கருப்புக்கொடி போராட்டம்
 6. பெருந்தொற்று
  தமிழகத்திற்கு கொரோனா 3வது அலை ஆபத்து? சுகாதாரத்துறை செயலாளர் பகீர்
 7. குமாரபாளையம்
  குமாரபாளையம் அருகே மனைவியின் கையை உடைத்த கணவன் தலைமறைவு
 8. திருநெல்வேலி
  நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
 9. துறையூர்
  உப்பிலியபுரம் அருகே நிலம் ஆக்கிரமிப்பு கண்டித்து விவசாயிகள்...
 10. செங்கல்பட்டு
  செங்கல்பட்டு : சிறையில் இருந்தபடியே துணை தலைவரான பிரபல ரவுடியின் மனைவி