/* */

கண்டிப்பட்டி மஞ்சுவிரட்டு: காளைகள் முட்டியதில் 80 பேர் காயம்; ஒருவர் பலி

சிவகங்கை அருகே கண்டிப்பட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில், காளைகள் முட்டியதில் 80 பேர் காயமடைந்தனர். ஒருவர் பலியானார்

HIGHLIGHTS

கண்டிப்பட்டி மஞ்சுவிரட்டு: காளைகள் முட்டியதில்  80 பேர் காயம்; ஒருவர் பலி
X

சிவகங்கை அருகே கண்டிப்பட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு

சிவகங்கை அருகே கண்டிப்பட்டியில் பழமையான புனித அந்தோணியார் ஆலயத்தில் தை மாதம் 5ம் நாள் விழாவாக சமத்துவ பொங்கலும், மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. தமிழக அரசின் விதிமுறைப்படி வாடிவாசல் அமைக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் கண்காணிப்பில் மஞ்சுவிரட்டு நடந்தது. வாடிவாசல் வழியாக மஞ்சுவிரட்டு போட்டி என அறிவித்து, சுமார் 300 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டும், அனுமதியின்றி கட்டுமாடுகளாக சுமார் 300 மாடுகள் ஆங்காங்கே அவிழ்க்கப்பட்டது.

பின்னர் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை தொழுவத்தில் துவக்கி வைத்தார். ஆன் லைன் மூலமாக 138 காளைகள் பதிவு செய்யப்பட்டும், 73 காளைகள் மட்டுமே அவிழ்த்து விடப்பட்டது. சுற்று வட்டார கிராம மக்கள் சுமார் 10,000 பேர் மைதானத்தில் கூடியிருந்து வேன்களில் அமர்ந்து ரசித்தனர்.

சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் பார்வையாளர்கள் மாடுபிடி வீரர்கள் என 80 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த 19 பேர் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் பாகனேரியை சேர்ந்த மலைச்சாமி (52) என்பவர் மாடு முட்டி படுகாயமடைந்து சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

நேற்று முன்தினம் நெற்குப்பையில் நடைபெற்ற சிவகங்கை மாவட்டத்தில் போட்டியில் ஒரு சிறுவன் உயிரிழந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு போட்டியல் மாடு முட்டி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

Updated On: 19 Jan 2022 4:33 AM GMT

Related News