/* */

சிவகங்கை மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

அனைத்து வட்டாரங்களிலும் மொத்தம் 68 கிராம பஞ்சயாத்துகளில் இந்த இரு திட்டங்களும் இணைந்து செயல்படுத்தப்படுகிறது

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்
X

பைல் படம்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 445 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன.இந்த பஞ்சாயத்துக்களில் 5 ஆண்டு காலத்திற்குள் சுழற்சி முறையில் அனைத்து பஞ்சாயத்துக்களிலும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நல திட்ட பணிகளை அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், இத்திட்டத்தின் தேர்வு செய்யப்படும் கிராம பஞ்சாயத்துக்களில் ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் தொடர்புடைய துறைகள் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமும் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2021-2022ஆம் ஆண்டு முதல் கட்டமாக அனைத்து வட்டாரங்களிலும் மொத்தம் 68 கிராம பஞ்சயாத்துகளில் இந்த இரு திட்டங்களும் இணைந்து செயல்பட தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ள 68 கிராம பஞ்சயாத்துகளிலும் 10.05.2022 செவ்வாய்கிழமை அன்று அனைத்துத்துறைகளும் இணைந்து மேற்கண்ட வட்டங்களில் உள்ள கிராமங்களில் ஒருங்கிணைந்த சிறப்பு நலத்திட்ட முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

அதன்படி, தேவகோட்டை வட்டத்தில் திருமணவயல், கீழசனி, நாகாடி, சிறுவதி, கண்டதேவி, திருவேகம்பத்தூர், வீரை குருந்தனக்கோட்டை ஆகிய கிராமங்களிலும், இளையான்குடி வட்டத்தில் காரைக்குளம், தடியமங்களம், தாயமங்களம், சாலைக்கிராமம், நகரகுடி, பெரும்பச்சேரி ஆகிய கிராமங்களிலும், காளையார்கோவில் வட்டத்தில் சிரமம், சிலுக்கப்பட்டி, மேலமருங்கூர், இலந்தக்கரை, முத்தூர்வாணியங்குடி, மல்லல், அதப்படக்கி, அ.வேலங்குளம் ஆகிய கிராமங்களிலும், கல்லல் வட்டத்தில் அ.சிறுவயல், சிறுவயல், அ.கருங்குளம், பொய்யாலூர், குருந்தம்பட்டு ஆகிய கிராமங்களிலும், கண்ணங்குடி வட்டத்தில் கண்ணங்கடி, பூசலக்குடி, களத்தூர் ஆகிய கிராமங்களிலும், மானாமதுரை வட்டத்தில் மாங்குளம், செய்களத்தூர், கல்குறிச்சி, கீழப்பசலை, முத்தனேந்தல், மேலப்பசலை ஆகிய கிராமங்களிலும், எஸ்.புதூர் வட்டத்தில் வலசைப்பட்டி,

மசுண்டப்பட்டி, செட்டிக்குறிச்சி ஆகிய கிராமங்களிலும், சாக்கோட்டை வட்டத்தில் சங்கராபுரம், சிறுகப்பட்டி, செங்கந்தங்குடி, ஜெயங்கொண்டான், நாட்டுச்சேரி, அமராவதிபுதூர் ஆகிய கிராமங்களிலும், சிங்கம்புணரி வட்டத்தில் எஸ்.மாம்பட்டி, பிரான்மலை, எம்.சூரக்குடி, வகுத்தெழுவான்பட்டி ஆகிய கிராமங்களிலும், சிவகங்கை வட்டத்தில் வாணியங்குடி, சக்கந்தி, மாங்குடி தெற்குவாடி, காஞ்சிரங்கால், ஆலங்குளம், அலவாக்கோட்டை, திருக்கோஷ்டியூர், இ.மாம்பட்டி, பூலாங்குறிச்சி, திருக்கோலக்குடி, காரையூர், எ.வேளங்குடி, ஏனாதி-தேளி, கலுக்கார்கடை, பிரமனூர், பூவந்தி, பொட்டபாளையம், கிழத்தெறி ஆகிய கிராமங்களில் நடத்தப்படவுள்ளது.

மேலும், வேளாண்மைத் துறையின் சார்பில் மண் மாதரி ஆய்வு, தரிசுநில மேம்பாடு, தென்னங்கன்றுகள், தார்பாலின், ஸ்பிரேயர், பயறு விதைகள் வழங்குதல், தோட்டக்கலைத்துறையின் சார்பில் காய்கறி விதைகள் மற்றும் கன்றுகள் வழங்குதல், பழக்கன்றுகள் வழங்குதல், நிழல் வலை கூடம் அமைக்க பயனாளிகள் தேர்வு செய்தல், வருவாய்த்துறையின் சார்பில் பட்டா மாறுதல், சிறுஃகுறு விவசாயிகள் சான்று வழங்குதல், கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க விண்ணப்பங்கள் ஆய்வு செய்தல், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் பண்ணைக்குட்டை அமைத்தல்.

கிராம இணைப்பு சாலைகள் அமைத்தல், உலர் களங்கள் தேர்வு செய்தல், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்தல், பண்ணைக்குட்டை அமைத்தல், பண்ணை இயந்திரங்கள், சூரிய ஒளி பம்ப்செட்கள் பயனாளிகள் தேர்வு செய்தல், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கால்நடை சிகிச்சை சிறப்பு முகாம், தீவன பயிர் விதை விநியோகம் செய்தல், கூட்டுறவுத்துறையின் சார்பில் பயிர் கடன், கிசான் கடன் அட்டை பயனாளிகள் தேர்வு செய்தல், மகளிர் திட்டம் சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையம், இயற்கை வேளாண்மை, உற்பத்தியாளர்கள் குழுக்கள் தேர்வு செய்தல், நீர் வள ஆதாரத் துறையின் சார்பில் கண்மாய்கள் தூர்வாருதல் கட்டமைப்பு ஆய்வு பணிகள் செய்தல் ஆகியத் துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு, புதிய திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

மேலும் ,இந்த முகாம்களில் பட்டு வளர்ச்சித்துறை, கிராமத்தொழில் துறை அலுவலர்களும் கலந்து கொண்டு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளனர். எனவே, இந்த முகாம்களில் தொடர்புடைய கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை பெற்ற பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

Updated On: 8 May 2022 12:15 PM GMT

Related News