/* */

நாளை பொதுப்போக்குவரத்து தொடக்கம்: சேலத்தில் 1,047 அரசு பேருந்துகள் 'ரெடி'

நாளை பொதுப்போக்குவரத்து துவங்க உள்ள நிலையில், சேலம் கோட்டத்தில் 1,047 பேருந்துகள் தூய்மைப்படுத்தப்பட்டு தயாராக உள்ளன.

HIGHLIGHTS

நாளை பொதுப்போக்குவரத்து தொடக்கம்: சேலத்தில் 1,047 அரசு பேருந்துகள் ரெடி
X

சேலம் ஜான்சன் பேட்டையில் உள்ள போக்குவரத்து பணிமனையில், அரசு பஸ்கள் தூய்மைப்படுத்தப்பட்டு, போக்குவரத்துக்கு தயாராகின்றன. 

தமிழகத்தில் நோய்த்தொற்று பாதிப்பு அதிகமாக இருந்த 11 மாவட்டங்களை தவிர்த்து, இதர மாவட்டங்களில் பேருந்து சேவை துவங்கப்பட்டது. இதனிடையே, தற்போது 11 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு குறைந்து கொண்டே வந்ததால் , தமிழகம் முழுவதும் நாளைமுதல், பேருந்து சேவை துவங்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து, சேலம் கோட்டத்தில் உள்ள 490 நகரப் பேருந்துகள் மற்றும் 557 வெளிமாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் என, மொத்தம் 1,047 பேருந்துகளையும் தூய்மைப்படுத்தும் பணியில் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டனர்.

தற்போது, போக்குவரத்து ஊழியர்கள், பேருந்துகளை தூய்மைப்படுத்தி, கிருமிநாசினி தெளித்து, பேருந்தின் பேட்டரிகளை சரிபார்த்து, இயக்குவதற்கு தயார் நிலையில் வைத்துள்ளனர். பொதுப்போக்குவரத்து தொடங்குவதால், பொதுமக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

Updated On: 4 July 2021 10:51 AM GMT

Related News