/* */

ஆளுநர் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு வந்தும் பங்கேற்கவில்லை: திருமாவளவன்

தமிழக ஆளுநர் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு வந்தும் பங்கேற்கவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

ஆளுநர் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு வந்தும் பங்கேற்கவில்லை: திருமாவளவன்
X

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்.

சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, நீட் தேர்வு தமிழக மாணவர்களை பழிவாங்கி கொண்டிருக்கிறது.எனவே நீட் தேர்வு மற்றும் வேளாண் சட்டத்திற்கு எதிரான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 20ஆம் தேதி அவரவர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நடைபெறக் கூடிய இந்த போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ரவி மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ளன.நாகலாந்து மாநிலத்தில் அவருக்கு எதிராக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது என்பது அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.எனவே தான் அவரது நியமனத்தை திரும்பபெற வேண்டும் என்று விசிக கோரிக்கை விடுத்தோம். ஆளுநர் பதவியேற்பு விழாவிற்கு எனக்கு அழைப்பு வந்தது, ஆளுநர் நியமனத்தில் உடன்பாடு இல்லாத காரணத்தால் பங்கேற்கவில்லை என்றார்.

அதிமுக ஆட்சியில் அடி முதல் நுனி வரை ஊழல் தலைவிரித்து ஆடியது. இன்றைக்கு அது வெளிச்சத்துக்கு வருகிறது. இதை அதிமுகவே அமைதியாக வேடிக்கை பார்க்கிறது. எதிர்ப்போ, விமர்சனமோ அவர்களிடம் இருந்து வரவில்லை. கடமையை செய்யும் ஊடகவியலாளர்களை தாக்குவது கண்டத்திற்குரியது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் திமுக உடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறிய அவர்,தமிழகத்தில் திமுகவின் ஆட்சி சிறப்பாக உள்ளது ; திமுக அரசு என்பதைவிட சமூக நீதி அரசு என்பதே பொருத்தமானது என்று கூறினார்.

Updated On: 19 Sep 2021 2:30 AM GMT

Related News