/* */

சேலம் அருகே ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மாயம்: ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு

சேலம் அருகே 4 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மாயமானதால் ரேஷன் கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு...

HIGHLIGHTS

சேலம் அருகே ரூ.4 லட்சம் மதிப்பிலான  பொருட்கள் மாயம்: ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு
X

ஓமலூர் பகுதியில் உள்ள நியாய விலை கடையில்,  பொதுமக்களுக்கு வழங்கும் பொருட்களின் தரம் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் ஆய்வு செய்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூர், பெரமச்சூர் ரேஷன் கடையில் 848 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதன் விற்பனையாளராக புளியம்பட்டியைச் சேர்ந்த பாலசுப்ரமணி உள்ளார். கடந்த 19ஆம் தேதி, மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன் தலைமையில் வழங்கல் பறக்கும்படை குழுவினருடன் ஆய்வு செய்தபோது, நான்கு லட்ச ரூபாய் மதிப்பிலான ரேஷன் பொருட்கள் இருப்பு இல்லை என்பது தெரிந்தது.

இதுதொடர்பாக கூட்டுறவு அதிகாரிகள், பாலசுப்ரமணியிடம் விசாரித்தனர். தற்காலிகமாக மாற்றுப்பணியாளர் மூலம் அந்த கடையில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஓமலூரில் நிவாரணப் பொருட்களை வழங்குவது குறித்து ரேஷன் கடைகளை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆய்வு செய்தார். பின்னர், பெரமச்சூர் கடைக்கு சென்றபோது, அங்குள்ள மக்கள் சில மாதங்களாக முறையாக பொருட்களை வழங்கவில்லை, கேட்டால் இருப்பு இல்லை என்ற பதிலையே பாலசுப்ரமணி சொல்லி வந்ததாக குற்றம்சாட்டினர். இதையடுத்து கூட்டுறவு அதிகாரிகளிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

Updated On: 22 Jun 2021 7:42 AM GMT

Related News