/* */

மேட்டூரில் ஒரு லட்சம் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு வைக்கும் பணி துவக்கம்

மேட்டூரில் ஒரு லட்சம் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு வைக்கும் பணியினை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

மேட்டூரில் ஒரு லட்சம் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு வைக்கும் பணி துவக்கம்
X

மீன்வளத் துறையின் சார்பில் 1 இலட்சம் மீன் விரலிகளை இருப்பு வைக்கும் பணியினை மேட்டூர், தெர்மல் நான்கு ரோடு மேம்பாலம் பகுதியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

மேட்டூர், தெர்மல் நான்கு ரோடு மேம்பாலம் பகுதியில் மீன்வளத் துறையின் சார்பில் 1 இலட்சம் மீன் விரலிகளை இருப்பு வைக்கும் பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

மீன்வளத் துறையின் சார்பில் நாட்டின மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்தல் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 1 இலட்சம் மீன் விரலிகளை இருப்பு வைக்கும் பணியினை மேட்டூர், தெர்மல் நான்கு ரோடு மேம்பாலம் பகுதியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (28.10.2023) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், விவசாயத்தை போலவே மீன் வளத்தையும் பெருக்கவே அரசு ஆராய்ச்சி செய்து உள்நாட்டு மீனவர்கள் பயன்பெறவும், அதன் மூலம் அதிகளவிலான மக்கள் பயன்பெறவும் தமிழ்நாடு அரசு செய்து வருகின்றது. குறிப்பாக உணவு பொருள் தாயாரிக்கும் போது தானியங்களை உற்பத்தி செய்வது, புதிய தானிய வகைகளை கண்டுபிடிப்பது, இருக்கின்ற பழைய இனங்களை அழியாமல் பாதுகாப்பது அரசின் கடமையாகும்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் நாட்டின மீன் வளங்களை பாதுகாத்து பெருக்கிட ஆறுகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்திடும் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டில் மொத்தம் 40 இலட்சம் மீன்குஞ்சுகள் ரூ.120 இலட்சம் செலவில் ஆறுகளில் இருப்பு செய்திடும் பணி நடைபெற்று வருகிறது.

இத்திட்டமானது ஆறுகளை தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ள உள்நாட்டு மீனவர்களின் வருவாயினை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் ஆறுகளில் பெரும்பாலான இயற்கை வகையான நாட்டின மீன் இனங்கள் உள்ளன. பெரும்பாலான ஆறுகளில் பல்வேறு காரணங்களினால் நாட்டின மீன் இனங்கள் அழிந்து வருகின்றன. இவ்வகையான நாட்டின மீன் இனங்கள் முற்றிலுமாக அழித்துவிடாமல் பாதுகாத்துப் பெருக்கி அவற்றை அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்து சென்றிடும் பொருட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

நாட்டின மீன்குஞ்சுகளை இருப்புச் செய்வதன் மூலம் உயிரினங்களின் உயிர்ச்சமநிலையை (Balance in) பாதுகாத்திட முடியும். நாட்டின மீன் வகைகள் இயற்கை நீர் நிலைகளில் இருக்கும் போது தாய் மீன்கள் முட்டையிட்டு, முட்டையிலிருந்து வெளிவரும் நுண்மீன் குஞ்சுகளை பிற வகை மின்களால் உண்ணப்படுவதால் மீள்குஞ்சுகளின் பிழைப்புத்திறன் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இதனால் அந்த மீன்இனமே அழிந்துவிடும் சூழல் ஏற்படுகிறது. இதனைத் தவிர்த்து நாட்டிண மின்வளத்தினைப் பாதுகாத்திட, நட்டின மீன்களை அரசு மீன்குஞ்சு உற்பத்தி

நிலையங்களில் தூண்டுதல் முறையில் இனப்பெருக்கம் செய்து மீன்குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்யப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி ஆற்றில் சேல்கெண்டை, கல்பாசு மற்றும் இந்திய பெருங்கெண்டைகளான கட்லா, ரோகு, மிர்கால் ஆகிய மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்படுகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகளான காவிரி, தென்பெண்ணையாறு, பவானி, தாமிரபரணி, வைகை, வெண்ணாறு, வெட்டாறு, கோரையாறு, கொள்ளிடம், அமராவதி, ஆகிய ஆறுகளில் தாய்மீன்கள் உயிருடன் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு, தூண்டப்பட்ட முறையில் நாட்டின தாய் மீன்களிலிருந்து மீன்குஞ்சுகளை உற்பத்தி செய்யும்போது மீன்குஞ்சுகளின் பிழைப்புத்திறன் வெகுவாக அதிகரித்திடும்.

அந்தவகையில் இன்றைய தினம் சேலம் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 3 இலட்சம் மீன் விரலிகள் 80மி.மீ 100மி.மீ அளவில் வளர்க்கப்பட்டு, முதல்கட்டமாக ரூ. 2.70 இலட்சம் மதிப்பீட்டில் 1 இலட்சம் மீன் விரலிகள் மேட்டூர் காவேரி ஆற்றின் தெர்மல் நான்கு ரோடு மேம்பாலம் பகுதியில் இருப்பு செய்யப்படும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் தணிக்காசலம், மேட்டூர் நகரமன்ற தலைவர் சந்திரா, எடப்பாடி நகரமன்ற தலைவர் டி.எம்.எஸ்.பாஷா, துணைத் தலைவர் காசி விஸ்வநாதன், மேட்டூர் நகராட்சி ஆணையாளர் நித்தியா, மீன்வளத்துறை மண்டல துணை இயக்குநர் சுப்பரமணியன், உதவி இயக்குநர் த.உமா கலைச்செல்வி, மேட்டூர் வட்டாட்சியர் விஜி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Oct 2023 7:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...