/* */

சிமெண்ட் சாலையை உடனடியாக சீரமைக்க கோரி சோளிங்கரில் சாலை மறியல்

சேதமடைந்த சிமெண்ட் சாலையை உடனடியாக சீரமைக்க கோரி சோளிங்கர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

சிமெண்ட் சாலையை உடனடியாக சீரமைக்க கோரி சோளிங்கரில்  சாலை மறியல்
X

சோளிங்கர் பேருந்து நிலைய பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் சேதமடைந்த சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் பின்புறத்தில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன அவர்கள் தினமும் பயன்படுத்தும் சிமெண்ட் சாலை வெகுநாட்களாகவே சேதமடைந்து குண்டும் குழியுமாய் உள்ளது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தனர், அதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதியில் சீரான சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது. ஆயினும் இதுவரை சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபடாததை அடுத்து அப்பகுதி மக்கள் ஆவேசம் அடைந்து சோளிங்கர் பேருந்து நிலையத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து அங்கு விரைந்து வந்த சோளிங்கர் காவல் துணை ஆய்வாளர் அருண்குமார் மற்றும் பேரூராட்சி தூய்மை ஆய்வாளர் வடிவேல் பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு குத்தகைதாரர் உடனடியாக வரவழைக்கப்பட்டு பணிகளை துவக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்புக்கு உள்ளாகியது.

Updated On: 24 Aug 2021 2:07 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்