/* */

மழை வெள்ளத்தில் சரிந்து போன சாலைப்பகுதியில் அமைச்சர் ஆய்வு

சோளிங்கர் அடுத்த ஆயிலம் பகுதியில் மழை வெள்ளத்தால் சரிந்துபோன சாலையை அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

மழை வெள்ளத்தில் சரிந்து போன சாலைப்பகுதியில் அமைச்சர் ஆய்வு
X

காவேரிப்பாக்கம் அருகே மண் சரிவு ஏற்பட்ட சாலையை ஆய்வு செய்த அமைச்சர் காந்தி 

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரிலிருந்து, காவேரிப்பாக்கம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை ஆயிலம் என்ற கிராமப்பகுதியில் பெய்த மழைக்காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சாலை சுமார் 100அடி நீளத்திற்கு சரிந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது.

இதனால் , அப்பகுதி வழியாக சோளிங்கர் காவேரிப்பாக்கம் மற்றும் வழி கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த அமைச்சர் காந்தி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் மற்றும் அதிகாரிகள் சரிந்து போன சாலைப்பகுதியினை ஆய்வு செய்தனர்

மேலும், அமைச்சர் சரிந்துபோன சாலையை சரிசெய்திடவும், தடுப்புப்பணிகள் மற்றும் சாலை சீரமைப்பு வேலைகளைத் தொடங்கிட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆட்சியர் மற்றும் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

Updated On: 30 Nov 2021 1:56 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...