/* */

விதியின் விளையாட்டு: விபத்தில் தப்பியவர் மற்றொரு விபத்தில் பலி

வாலாஜாப்பேட்டை அருகே கார் கவிழ்ந்ததில் உயிர் தப்பியவர், சாலையை கடக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி,

HIGHLIGHTS

விதியின் விளையாட்டு: விபத்தில் தப்பியவர் மற்றொரு விபத்தில் பலி
X

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த சுமைதாங்கி பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனில் கார்ஒன்று மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. அருகிலிருந்தவர்கள் காரினுள் இருந்த இளைஞரை மீட்டு சாலையோரமாக அழைத்துச்சென்று அமர வைத்து விசாரித்தனர்.

அவர்களிடம், தனது பெயர் சதீஷ் எனவும், பூந்தமல்லியைச் சேர்ந்தவர் என்றும் உறவினரின் இறப்பிற்கு திருவண்ணாமலை சென்று வீடு திரும்புவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், சதீஷ் எதிர்சாலையான பெங்களூரு சாலையைக் கடக்க முயன்றார் . அப்போது,, எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. அதில் , படுகாயமடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானர்.

விபத்து குறித்து தகவலறிந்த , போலீஸார் சம்பவ இடம் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜாஅரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்பு ,விபத்துக்குறித்து வழக்குப் பதிவுசெய்து காரணமான வாகனத்தை தேடிவருகின்றனர்.

கார் கவிழ்ந்ததில் உயிர் தப்பியவர், மற்றொரு வாகனம் மோதி அதே இடத்தில் பலியானது விதியின் விளையாட்டா?

Updated On: 14 July 2021 6:02 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்