/* */

சோளிங்கரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சோளிங்கர் அருகே நீர்நிலைபகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினர் அகற்றினர்.

HIGHLIGHTS

சோளிங்கரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
X

சோளிங்கர் அடுத்த புலிவலம் பகுதியில் உள்ள நெட்டேரி, பெரிய ஏரி பகுதிகளில் 2.6 ஹெக்டர் அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. அங்கு ஆக்ரமிப்பு செய்திருந்த பகுதிகளை பொதுப்பணித்துறையினர் அளவிட்டு, தாங்களாக முன் வந்தது ஆக்ரமிப்புகளை அகற்ற கால அவகாசத்தை அளித்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரதுறை உதவி பொறியாளர் சேரலாதன் தலைமையில் அதிகாரிகள் நெட்டேரி, பெரிய ஏரி ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து செய்திருந்த 2.6 ஹெக்டர் நிலத்தையும் நிலத்தை சுற்றி இருந்த அமைந்திருந்த வேலி மற்றும் வரப்புகளையும் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அகற்றி நீர்பிடிப்பு நிலத்தை பொதுப்பணித்துறை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

மேலும் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த விளையாட்டு மைதானத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அதே பகுதியில் ஐந்து வீடுகளில் மின் இணைப்புகளும், பெரிய ஏரி பகுதியில் மூன்று வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

Updated On: 31 March 2022 12:47 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!