/* */

ராணிப்பேட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

ராணிப்பேட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
X

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது. முகாமில் உடல் உழைப்பிற்கு ஏற்ப மருத்துவர்களின் நேரடி ஆய்வுக்குப் பின்னர் மாற்றுத்திறனாளிகள் 323 பேருக்கு அடையாள அட்டைகள்‌ வழங்கப்பட்டது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 83 மாற்றுத்திறனாளிகள் பெயர் பதிவும், 157 புதிய பயனாளிகளுக்கு பதிவும் மேற்கொள்ளப்பட்டது.

முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு தக்க செயல் திறன் கொண்ட செல்போன் -7, ரொலேட்டர்-2, காதுக்குப் பின்னால் அணியும் காதொலிக் கருவி -1, மொபட்-1, சக்கர நாற்காலி -3 ஆக மொத்தம் 14 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

முகாமில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 16 March 2022 2:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’