/* */

பழமையும் பெருமையும் கொண்ட வாலாஜா இரயில் நிலையத்திற்கு இன்று 165 வது பிறந்த நாள்.

தென்னிந்தியாவின் கடந்து முதல் பயணிகள் ரயில் நிலையமாக பெருமையை பெற்ற வாலாஜா ரோடு ரயில் நிலையம் இன்று 165 ஆண்டைக் கொண்டாடுகிறது

HIGHLIGHTS

பழமையும் பெருமையும் கொண்ட வாலாஜா இரயில் நிலையத்திற்கு இன்று 165 வது பிறந்த நாள்.
X

பெருமைமிகு வாலாஜா ரயில் நிலையம்

இந்திய துணைக்கண்டத்தில் முதல் பயணிகள் ரயில் சேவையில் 1853 ஆம் ஆண்டு ,ஏப்ரல் 16ஆம் தேதி, மும்பை தானே இடையே முதல் பயணிகள் இரயில் இயக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தென்இந்தியாவில் மெட்ராஸ் இரயில்வே கம்பெனி,1857ஆம் ஆண்டு ஜூலை 1ந்தேதி, சென்னை ராயபுரத்தில் இருந்து வியாசர்பாடி வழியாக இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜப்பேட்டை அருகே உள்ள வாலாஜா ரோடு இரயில்நிலையம் வரை முதல் பயணிகள் ரயில் சேவையை தொடங்கியது .

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் முக்கிய தொழில்நகரமாகவும் ,மாவட்ட தலைநகரமாகவும் இராணிப்பேட்டை உள்ள நிலையில் அருகில் உள்ள வாலாஜா ரோட் இரயில் நிலையம் பிரதானமாக திகழ்ந்து வருகிறது மேலும் இரயில்நிலையம் வழியாக கேரளா,கர்நாடகா, மற்றும் ஆந்திரா,மும்பை,சென்னை, உட்பட அனைத்து முக்கிய பெருநகரங்களுக்கு மற்றும் வடமாநிலங்களுக்கு தினசரி, மற்றும் வாராந்திர இரயில்கள் சென்று வருகின்றன .

இருப்பினும் சில இரயில்கள்மட்டுமே இரயில்நிலையத்தில் நின்று செல்கின்றன அவற்றைப் பயன் படுத்த வாலாஜாஇரயில் நிலையத்திற்கு தொழிலதிபர்கள்,வணிகர்கள், அரசு,தனியார் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என தினசரி சுமார் 4000.க்கும் மேற்பட்டோர் பயணிகளாக வந்து செல்கின்றனர்.

அதன்மூலம் இரயில் நிலையம் ஆண்டிற்கு ₹6.50 கோடிக்கு மேல் வருவாயை ஈட்டித்தருகிறது

இந்நிலையில் பழமையையும், பெருமையையும் வாய்ந்த வாலாஜா ரோடு இரயில் நிலையம் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, நிழற்குடை மற்றும் பயணிகள் காத்திருப்பு அறை போன்றவை பயணிகளுக்கு பயன்படாமல் பெயரளவில் மட்டுமே உள்ளது. இரயில் அபிவிருத்தி திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் மூலமாக இரயில் நிலையத்தை தரம் உயர்த்திட இரயில்வே நிர்வாக நடவடிக்கையை எடுக்க வேண்டியும், அதே நேரத்தில் அரக்கோணத்திலிருந்து காட்பாடி வழியாக காலை நேரங்களில் உள்ளுர் இரயில்களான வேலூர் கண்டோன்மென்ட் பாசஞ்சர்,பெங்களூர் பாசஞ்சர் இரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று இரயில் உபயோகிப்போர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்..

Updated On: 3 July 2021 5:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?