/* */

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணி

இராணிப்பேட்டை காரையில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்ட கோரிக்கையில் அமைக்கப்படும் சாலைப்பணியை அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ்  சாலை அமைக்கும் பணி
X

காரை பகுதியில் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர்ஸ்டாலின் உங்கள் தொகுதியில ஸ்டாலின் என்று ஆங்காங்கே பெட்டிகள் வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றனர் .

முதல்வரானதும் அத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை மனுக்களை பரிசீலித்து நிறைவேற்ற தனி ஆணையம் அமைத்து நிறைவேற்றிவருகிறார்.

அதில் ராணிப்பேட்டையில் உள்ள காரையில் சுடுகாட்டிற்கு செல்ல சரியான பாதை இல்லை என்றும் சாலையை ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர். இதனைபரிசீலித்து அதிகாரிகள் காரைக்கு சென்று பாலாற்றங்கரை ஓரமுள்ள சுடுகாடு வரை 4 கிமீ தொலைவிற்கான சாலையை ஆய்வு செய்தனர். அதில் சாலை, தனியாருக்கு சொந்தாமன இடத்தில் செல்வதை அறிந்தனர்.

உடனே இது குறித்து அறிக்கையை உயரதிகாரிகளுக்கு சமர்ப்பித்தனர். அதன் பேரில் உயரிதிகாரிகள் சம்பந்தபட்ட இட உரிமையாளரிடம் பேசி அதற்கான இழப்பீடு தொகையை வழங்கி. சாலையை உறுதிபடுத்தினர். இதனைத்தொடர்ந்து காரைமக்களின் கோரிக்கையான சுடுகாட்டு பாதையை அமைக்க ரூ1 கோடிக்கு திட்டமதிப்பீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சாலையமைக்கும் பணி துவக்கமாக பூமி பூஜைபோடும் நிகழ்ச்சி இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் தலைமையில் நடந்தது. பூஜையில் சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறிமற்றும் துணி நூல்துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில்ஆற்காடு எம.எல் ஏ ஈஸ்வரப்பன், டிஎஸ்பி பிரபு மற்றும் பொதுமக்கள் பலர.கலந்து கொண்டனர்.

முன்னதாக அமைச்சருக்கு காரை பொன்னியம்மன் கோயிலிலிருந்து பூரண கும்ப மரியாதை அளித்து மேளதாளத்துடன் பொதுமக்கள் வரவேற்றனர்.

Updated On: 27 Oct 2021 4:40 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...