/* */

படியம்பாக்கம் கொள்ளாபுரிஅம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது

இராணிப்பேட்டை மாவட்டம் படியம்பாக்கம் கொள்ளாபுரிஅம்மன் கோயில் கும்பாபிஷேகவிழா கோலாகலமாக நடந்தது.

HIGHLIGHTS

படியம்பாக்கம் கொள்ளாபுரிஅம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது
X
இராணிப்பேட்டை மாவட்டம் படியம்பாக்கம் கொள்ளாபுரி அம்மன்  கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த படியம்பாக்கம் கிராமத்தில் உள்ள பழமையான கொள்ளாபுரி அம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு இன்று காலை1008 சீர்வரிசைப் பொருட்களுடன் குதிரைவாகனத்தில் செண்டை மேளங்கள் முழங்க கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது..

விழாவினையொட்டி முதல்நாள் 18ந்தேதி வெள்ளிக்கிழமை காலை மங்கள இசையுடன் கோ பூஜை ,அநுக்ய விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை தொடங்கி கணபதி,நவகிரக வேள்வி,சங்கல்பம், வருணபூஜை,, எந்திரஸ்தாபனம் விக்ரகபிரதிஷ்டை அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் ஆகியவை நடந்தது மறுநாள் சனிக்கிழமை இரண்டாம் கால யாகம்,துர்காஅஷ்ட ,நட்சத்திரவேள்விகள். வேதபாராயணங்கள் ,மூன்றாம் கால யாகம்,,சுமங்கலி பூஜை,அஷ்டலஷ்மி வேள்வி ஆகியவற்றுடன் தேவாரம்,திருவாசகங்கள் பாடப்பட்டது .

மூன்றாம் நாள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் காலயாகம்,காயத்ரி ஜபம் கொள்ளாபுரிஅம்மன் மூலமந்திர வேள்விகள் மற்றும் 108 ஹோம மூலிகை அஷ்டதிரவியாஹுதி ஹோமங்களுடன் யாகசாலை பூஜைகள் நடந்து

1008 சீர்வரிசைப் பொருட்கள் ,யாகசாலையிலிருந்து தீர்த்தகலசங்கள் வேதமந்திரங்கள் ஓத புறப்பாடாக கோயிலை வலம வந்து மூலவர் கொள்ளாபுரி அம்மனுக்கு மற்றும் விமானத்திற்கும் கலச தீர்த்தம் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்த்து . அதனைத்தொடர்ந்து விசேஷ தீபாராதனைகள் நடந்து அன்னதானம், வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக காட்பாடியைச்சேர்ந்த ஜெயராஜ்,அவர் மனைவி ரீனா,அசோகன், வாலாஜா பழனி படியம்பாக்கம் மூர்த்தி, நாட்டாண்மைகள் ஊர்பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

Updated On: 20 Feb 2022 6:21 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்