/* */

பொன்னையாற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

சித்தூர் கலவகுண்டா அணைதிறப்பால் பொன்னை, பாலாற்றங்கரையோர மக்களுக்கு கலெக்டர் பாஸ்கரப்பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

பொன்னையாற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
X

கனமழைக் காரணமாக பொன்னையற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சித்தூர் கலவகுண்டா அணைதிறப்பால் பொன்னை, பாலாற்றங்கரையோர மக்களுக்கு கலெக்டர் பாஸ்கரப்பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் கனமழைக் காரணமாக பொன்னையற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கலவகுண்டா அணையிலிருந்து வினாடிக்கு சுமார் 4500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பொன்னை அணைக்கட்டிலிருந்து சுமார் 4500 கனஅடி நீர் இரவு வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னையாற்றின் கரையோரம் உள்ள கிராமங்களான மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூர், கொண்டகுப்பம், சீக்கராஜபுரம், நரசிங்கபுரம், லாலாப்பேட்டை, மற்றும் பாலாற்றங்கரையோரமுள்ள .தெங்கால், காரை, திருமலைச்சேரி, பூண்டி, குடிமல்லூர், சாத்தம்பாக்கம், விசாரம், ஆற்காடு, சக்கரமல்லூர், புதுப்பாடி, உள்ளிட்ட கிராமங்களில் தாழ்வான பகுதியிலுள்ளவர்கள் பதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும் பொதுமக்கள் இளைஞர்கள் சிறுவர்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என்றும் வேடிக்கை பார்க்க அதிகம் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 23 Oct 2021 3:19 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்