/* */

இராணிப்பேட்டை கலெக்டர் தலைமையில் மனித உரிமை தின உறுதி மொழி ஏற்பு

இராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் தலைமையில் மனித உரிமை தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

இராணிப்பேட்டை கலெக்டர் தலைமையில்   மனித உரிமை தின உறுதி மொழி ஏற்பு
X

இராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதி மொழி ஏற்கப்பட்டது.

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் தலைமையில் உலக மனித உரிமைகள் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

அதில் இந்திய அரசியலைப்பு சட்டத்திலும் , இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும் பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமாறஉறுதி மொழிகிறேன் .எவ்வித வேறுபாடுமின்றி் அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன்.என்னுடைய எண்ணம் , சொல் அல்லது செயல் மூலம் பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்த ஒரு செயலையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்யமாட்டேன் .மனிதஉரிமைகள் மேம்படுவதற்கு நான் எப்போது ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் வாசித்தார்.

அனைத்து தறை அலுவலர்களும் பின்தொடர்ந்து கூறி உறுதிமொழியை ஏற்றனர்.உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முகம்மது அஸ்லம், ,வேளாண்மை இணை இயக்குநர் வேலாயுதம் , ,துணை ஆட்சியர்கள் சேகர்,சுரேஷ், தாரகேஸ்வரி, வட்டாட்சியர்கள் விஜயகுமார்,பாபு மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Dec 2021 11:24 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்