/* */

இராணிப்பேட்டை கலெக்டர் தலைமையில் தீண்டாமை உறுதி மொழி

இராணிப்பேட்டையில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் அதிகாரிகள், ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றனர்

HIGHLIGHTS

இராணிப்பேட்டை கலெக்டர் தலைமையில் தீண்டாமை உறுதி மொழி
X

கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் அதிகாரிகள், ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர் 

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு தினத்தையொட்டி உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழிகளான இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்/குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன்.

அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன். என்று மாவட்ட ஆட்சியர் வாசித்ததை அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து துறை அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் பின் தொடர்ந்து கூறி உறுதிமொழியேற்றனர்.

இந்நிகழ்வில் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், துணை ஆட்சியர்கள் இளவரசி, மணிமேகலைசேகர், சத்தியபிரசாத், வட்டாட்சியர்கள் பாபு, விஜயகுமார் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 29 Jan 2022 12:50 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!