/* */

இராணிப்பேட்டை மாவட்ட வெள்ள சேதங்களை மத்தியக் குழுவினர் ஆய்வு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளை சேதங்களை மத்தியக் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர் .

HIGHLIGHTS

இராணிப்பேட்டை மாவட்ட வெள்ள சேதங்களை  மத்தியக் குழுவினர் ஆய்வு
X

வெள்ள சேதங்கள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்ட மத்திய குழுவினர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 1-ம் தேதி முதல் பரவலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் பொன்னை, பாலாற்றில் சுமார் 90 ஆண்டுகளுக்கு பிறகு மிகப் பெரிய aஅளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் வாலாஜா பாலாறு தடுப்பணையிலிருந்து 1,08,000 கன அடி தண்ணீர் வெளியேறியது. இதனால் மாவட்டத்தில் சில இடங்களில் பாலாற்றங்கரையில் உடைப்புகள் ஏற்பட்டது.

மேலும், கரையோர கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் 3051 ஹெக்டர் நிலபரப்பில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, கடலை உள்ளிட்ட பயிர்களும்,752 ஹெக்டர் அளவில் தோட்டப்பயிர்களும் நீரில் மூழ்கி சேதமடைந்தன. கடுமையான வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரையோர கிராமங்களான சாத்தம்பாக்கம், பூண்டி, திருமலைச்சேரி, பூண்டி எசையனூர், புதுப்பாடி,சக்கரமல்லூர், திருப்பாற்கடல், கீழ்மின்னல், மேல்விஷாரம், புளியங்கன்னு, தெங்கால், ஏகாம்பரநல்லூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து பாதிப்படைந்தன.

இதனைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழைவெள்ள சேதங்களை பாதிப்புகளை நேரில் பார்வையிட மத்திய நிதியமைச்சக ஆலோசகர் ஆர்.பி.கவுல் தலைமையில் நீர்வள ஆதார முகமையின் இயக்குநர் தங்கமணி மற்றும் பவ்யா பாண்டே ஆகியோருடன் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், தமிழ்நாடு மின் ஆளுமை நிர்வாக இணை இயக்குநர் வெங்கடேஷ் உள்ளிட்ட 5 பேர் அடங்கிய மத்திய ஆய்வு குழுவினர் நேரில் ஆய்வு செய்ய இராணிப்பேட்டைக்கு வந்தனர்.

இராணிப்பேட்டை பாரத மிகுமின் நிறுவன விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்த விளக்க புகைப்பட காட்சிகளைப் பார்வையிட்டனர் அப்போது இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் குழுவினருக்கு பாதிப்புகளை விளக்கினார் .

பின்னர் மத்தியக்குழுவினர் காவேரிப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் ஏற்பட்டுள்ள பாலாறு கரை உடைப்பை சரி செய்யும் பணிகளை தற்போது பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து மேலபலம்புதூர் கிராமத்தில் வெள்ளத்தில் மூழ்கி சேதமாகி கிடக்கும் நெற்பயிர்களை பார்வையிட்டனர்

இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளசேதங்கள் துறைவாரியாக மதிப்பீடு செய்யப்பட்டு அவை மொத்தம் ரூ. 24.95 கோடியளவிற்கு சேதமடைந்துள்ளதாக அறிக்கையினை மாவட்ட நிர்வாகம் சார்பில் மத்தியக் குழுவிடம் அளிக்கப்பட்டது. மத்தியக்குழுவுடன் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், ஆற்காடு எம்.எல்.ஏ.ஈஸ்வரப்பன் ஆகியோர் பார்வையிட்டனர்

ஆய்வில் வருவாய், ஊரகம், நெடுஞ் சாலைத்துறை ,மற்றும் வேளாண், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 24 Nov 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...