/* */

சாதனை வீரர்களுக்கு "டென்சிங் நார்கே தேசிய சாகச விருது": இராணிப்பேட்டை ஆட்சியர் அறிவிப்பு

இராணிப்பேட்டை மாவட்டத்தில், 2020க்கான சாதனை வீரர்களுக்கு வழங்கப்படும் டென்சிங் நார்கே தேசிய சாகச விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

HIGHLIGHTS

சாதனை வீரர்களுக்கு டென்சிங் நார்கே தேசிய சாகச விருது: இராணிப்பேட்டை ஆட்சியர் அறிவிப்பு
X

இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த, கடந்த 2018, 2019 மற்றும் 2020, ஆகிய ஆண்டுகளில் நிலம், நீர் மற்றும் வான் ஆகியவற்றில் சாதனைப் படைத்து, சாதனையாளர் அடிப்படையில் நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு மத்திய அரசு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறையின் மூலம் அர்ஜுனா விருதிற்கு இணையாக "டென்சிங் நார்கே தேசிய சாகச விருது" ஆண்டு தோறும் வழங்கி கௌரவித்து வருகிறது .

அவ்விருதானது வெண்கலச்சிலை, சான்றிதழ் மற்றும் வீரர்கள் அணியும் டையுடன் கூடிய மேல்சட்டை (ப்ளேசர்) (அ) சேலை, ரூ15 லட்சம் தொகை ஆகியவைக் கொண்டதாகும்

விருதினை பெறுவதற்கு நிபந்தனைகள்:

  • 2வது முறை பெற இயலாது,
  • இறந்தவர்களுக்கும் உண்டு
  • மத்திய அரசின் முடிவே இறுதியானது,
  • விருதினைப் பெற ஆதரவுகளைப் பிடிப்பது மற்றும் விண்ணப்பங்களை பின் தொடர்வது இருப்பின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

எனவே 2020ஆண்டுக்கான விருதினைப் பெற தகுதியுள்ளவர்கள் https://dbtyas-youth.gov.in என்ற இணையதள முகவரிக்கு விண்ணப்பங்களை வரும் 5ந்தேதிக்குள் (5-7-2021) விண்ணப்பிக்க வேண்டும் மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை, அலுவலக நேரங்களில் நேரில் வந்து தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிவித்துள்ளார்

Updated On: 1 July 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?