/* */

குழந்தைகளுடன் அகதியாக தனிப் படகில் வந்த இலங்கை தமிழ்ப் பெண்

இலங்கையில் கடும் உணவுப் பஞ்சம் காரணமாக குழந்தைகளுடன் அகதியாக இலங்கை பெண் தனிப் படகில் வந்தடைந்தார்.

HIGHLIGHTS

குழந்தைகளுடன் அகதியாக தனிப் படகில் வந்த இலங்கை தமிழ்ப் பெண்
X

குழந்தைகளுடன் அகதியாக வந்த இலங்கை பெண்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கை தமிழர்கள் இறுதிகட்ட போரின்போது அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் வந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ளனர்.

இதே போல் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தயாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியவசிய பொருட்களின் தட்டுபாடு காரணமாக இலங்கை தமிழர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வரக்கூடும் என்பதால் சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என கடலோர் பாதுகாப்பு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததது.

இந்நிலையில் நேற்று இரவு மட்டகளப்பு மாவட்டம் திமிலத்தீவு பகுதியை சேர்ந்த வாசினி (37), அவரது பதினொரு வயது மகள் நைனிக்கா மற்றும் நான்கு வயது மகன் ரங்கீசன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தனி ஒரு பெண்ணாக தனது குழந்தைகளை அழைத்து கொண்டு ஒரு பைப்பர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் தனுஷ்கோடி அரிசிசல்முனை கடற்கரையில் வந்து இறங்கி உள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இராமேஸ்வரம் மெரைன் போலீசார், இலங்கைத் தமிழர்களை மீட்டு மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அத்தியவாசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை அதிகரித்தள்ளது. குறிப்பாக நேற்று கோதுமையின் விலை கிலோவிற்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது. டீசல் மற்றம் பெட்ரோல் விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது.

விலைவாசி ஒரு பக்கம் உயர்ந்தாலும், அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாடு அதிகரித்துள்ளதால் இலங்கையில் குழந்தைகளை வைத்து வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் இலங்கை பணம் 2 லட்சத்தி 50 ஆயிரம் கொடுத்து பைப்பர் படகில் தமிழகத்திற்கு அகதிகளாக வந்தாக இலங்கை தமிழர் வாசினி பாதுகர்ப்பு வட்டார அதிகாரிகள் நடத்தி விசாரணையில் தெரிவித்தார்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் மூன்று இலங்கை தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள் என மெரைன் போலீசார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ந்தேதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 42 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 20 April 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...