/* */

இராமநாதபுரத்தில் 41ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

-மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேட்டி

HIGHLIGHTS

இராமநாதபுரத்தில் 41ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்
X

கொரோனா நோய்தொற்றை கட்டுப்படுத்த அணைத்து நடைவடிக்கையும் மேற்கொண்டு வருவதாகவும், இராமநாதபுரம் மாவட்டத்தில் 41 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தியாளர்களுக்கு பேட்டி.

இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வரும் இந்த சூழலில், இராமேஸ்வரம் பகுதி சுற்றுலா தளம் மற்றும் ஆன்மீக ஸ்தலம் என்பதால் யாத்திரிகள் அதிகளவில் வரக்கூடும் என்பதால் கொரோனா நோய் தொற்று அதிக அளவில் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அதனை கருத்தில் கொண்டு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இராமேஸ்வரம் பகுதிகளில் கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார், இராமேஸ்வரம் வந்த அவர் இராமேஸ்வரம் பகுதியில் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று அங்கே நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் எவ்வாறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரப்படுகிறது, கிருமிநாசினிகள் தொழிக்கப்படுகிறதா அதேபோல நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உணவுப்பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் சுகாதாரத்துறை சார்பில் வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு பாதிக்க பட்டவர்களிடம் கேட்டாறிந்தார்.

அதனைத் தொடர்ந்து இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் சரியாக வருகை புரிகிறார்களா மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார், அதைத்தொடர்ந்து இராமேஸ்வரம் இரயில் நிலையத்துக்கு சென்ற அவர் நாள் ஒன்றுக்கு எத்தனை ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் வருகை மற்றும் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறார்களா எனவும் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து இராமேஸ்வரம் கோவில் நான்கு ரத வீதிக்கு சென்ற அவர் தீயணைப்பு துறை சார்பில் நகர்ப்பகுதிகளில் கிருமிநாசினி தொளிக்கும் பணியை பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 300 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,இதில் குறிப்பாக இராமேஸ்வரத்தில் மட்டும் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகள் கார் வேன்களில் வரும் அனைவரையும் தடுப்புகள் அமைத்து தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன, அதேபோல பொதுமக்கள் அனைவரும் அரசு தெரிவித்த வழிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார், அதேபோல இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 41,000 தடுப்பூசிகள் போட பட்டுள்ளதாகவும் இராமேஸ்வரம் பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இராமேஸ்வரத்தில் இயங்கிவரும் விடுதிகள் அனைத்திலும் விடுதிகளில் தங்க வரும் யாத்திரையிடம் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும் மாஸ்க் அணிய வலியுறுத்தவேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Updated On: 15 April 2021 2:13 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்