/* */

மதுபோதையில் வீட்டுக்குள் ஏறி குதித்த மர்ம நபர்: தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

இராமேஸ்வரம் அருகே மதுபோதையில் வீட்டுக்குள் ஏறி குதித்த மர்ம நபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

மதுபோதையில் வீட்டுக்குள் ஏறி குதித்த மர்ம நபர்: தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
X

போலீசில் ஒப்படைக்கப்பட்ட போதை ஆசாமி.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியில் உள்ள பழைய போலீஸ் லைன் தெருவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இதில் இன்று இரவு மர்ம நபர் ஒருவர் மது போதையில் வீட்டுக்குள் ஏறி குறித்துள்ளார். இதனை கண்ட அந்த வீட்னுள் உள்ள பெண் ஒருவர் சத்தமிட்டுள்ளார். ஆனால் மது போதையில் இருந்த அந்த மர்ம நபரால் ஓட முடியாத நிலையில் வீட்டின் பின்புறம் ஒளிந்து கொண்டனர்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து ராமேஸ்வரம் நகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர் சேலத்தை சேர்ந்தவர் என்றும் தற்போது ராமேஸ்வரத்தில் கட்டுமான பணிக்கு வந்ததாகவும் தெரிவித்தார். அவரது சட்டை பையில் மதுபாட்டில் மற்றும் புகையிலை பொருட்கள் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவரை ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

ராமேஸ்வரம் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் தற்போது பிடிபட்டுள்ள நபருக்கு திருட்டு வழக்குகளில் தொடர்பு உள்ளதா அல்லது மதுபோதையில் தனியாக வீட்டில் இருக்கும் பெண்களிடம் பாலியல் தொல்லை கொடுக்க வீட்டுக்குள் ஏறி குதித்தாரா என்ற கோணத்தில் தொடர்ந்து ராமேஸ்வரம் நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 Dec 2021 3:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  2. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு
  3. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  6. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  7. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  8. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  9. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  10. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!