/* */

இராமேஸ்வரத்தில் 5 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள்

கடந்த 8ம் தேதி முதல் கனமழை, கடல் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

HIGHLIGHTS

இராமேஸ்வரத்தில் 5 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள்
X

ஐந்து நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள்.

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 8ம் தேதி முதல் கனமழை, கடல் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் மீனவர்களுக்கு மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு வழங்கப்படாததால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

இதையடுத்து மீனவர்கள் தங்களுடைய படகுகளை கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று இராமேஸ்வரம் மீனவர்களுக்கு மீன் பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என்று மீன்வளத்துறை தெரிவித்திருந்தது.

இதையடுத்து 5 நாட்கள் கழித்து இராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு மீன்வளத்துறை அதிகாரிகள் பெற்றுக் கொண்டு டீசல், குடிநீர், ஐஸ்கட்டி உள்ளிட்ட பொருட்களை தங்களது படகுகளில் ஏற்றிக்கொண்டு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

Updated On: 13 Nov 2021 7:13 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  7. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  8. இந்தியா
    நன்கொடை வழங்கியதில் இந்திய அளவில் இவர் தான் நம்பர் ஒன் பெண்மணியாம்
  9. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  10. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை