/* */

இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு அஞ்சி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை

HIGHLIGHTS

இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு  அஞ்சி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை
X

பைல் படம்

இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை அஞ்சி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இராமேஸ்வரம் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து இலங்கை சிறையில் அடைத்து வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் தேதி மாதம் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 43 மீனவர்களை இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டாலும் மீனவர்கள் இன்னும் தாயகம் திரும்பி வராத நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் நாகை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை நடுக்கடலில் சிறைபிடித்த இலங்கை மீனவர்கள் அவர்களை இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்தனர். ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப்பதிவு செய்த இலங்கைகடற்படயினர் யாழ்பாணம் சிறையில் அடைத்ததனர்.

இலங்கை கடற்படையின் தொடர் பிரச்னை காரணமாக இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதனால் ராமேஸ்வரத்தில் உள்ள 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி உள்ள மீனவர்களின் சுமார் ஒரு லட்சம் மீனவர்களும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மீன்பிடி சார்பு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் மீனவர் பிரச்னையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து நடுக்கடலில் மீனவர்கள் பிரச்னை இல்லாமல் மீன்பிடிக்க நிரந்தர தீர்வு பெற்றுத்தர வேண்டும் என மீனவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் அலுவலகத்தில் இந்திய கடற்படை அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் மீனவர்களுடனான ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆலோசனை கூட்டத்தில் மீனவர்கள் எல்லை தாண்டி செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டது. மேலும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்கள் தங்களது மீன்பிடி அனுமதி சீட்டு மற்றும் மீனவர்கள் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 2 Feb 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...